உடலில் பித்தம் குறைக்க அதிமருந்தாகும் களாக்காய்யின் நன்மைகள்!
நாளை கிடைக்கும் பலாக்காயை விட, இன்று கிடைக்கும் களாக்காய் பெரியது” என்பது பழமொழி. இந்த பழமொழியை எங்கள் பள்ளிக்கூட கணக்கு வாத்தியார் அடிக்கடி கூறுவார். அளவு என்ற கணக்கில் சிறியதாக இருப்பினும், மருத்துவ குணம் என்ற அளவில் களாக்காய் பெரியது தான்.
அன்றாடம் நமது உடலில் உண்டாகும் சின்ன, சின்ன கோளாறுகளுக்கு. நல்ல இயற்கை மருந்தாக விளங்குகிறது களாக்காய். இதை நாம் சிறு வயதில் பள்ளிக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே பார்த்திருக்க வாய்ப்பிருந்தது (இன்றும் இருக்கிறதா என தெரியவில்லை).
நாம் மறந்த, நம்மால் (நம்மைவிட்டு) மறைந்துக் கொண்டிருக்கும் மருத்துவ குணம் வாய்ந்த உணவுப் பொருட்களில் இதுவும் ஒன்று.
களாக்காய் என்ற இந்த காய் கரோண்டா என்றும் விஞ்ஞான ரீதியாக கரிசா காரண்டாஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது அப்போசினேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் புதர் தாவரமாகும்.
மலாயாவில் கெரெண்டா என்ற பெயரிலும், வங்காள திராட்சை வத்தல் அல்லது தென்னிந்தியாவில் கலாக்காய் என்றும், தாய்லாந்தில் நம்டெங், காரம்பா, கராண்டா, கராண்டா மற்றும் பிலிப்பைன்ஸில் பெருங்கிலா போன்ற வெவ்வேறு பெயர்களால் இது அழைக்கப்படுகிறது.
களாக்காய் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை கொண்ட பழமாகும். இப்பழங்களில் இரும்பு, தாது சத்துக்கள் அதிகமிருப்பதால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் குறைக்க பயன்படுகிறது. இதுதவிர, கிராமங்களில் உடல் ஆரோக்கியத்திற்காக ஊறுகாய் போட்டு களாக்காயை பயன்படுத்துகின்றனர். சேலம் மாவட்டம், கல்ராயன்மலை, பச்சமலை, நெய்யமலை, மண்மலை, நாகலூர் ஆகிய 740 கி.மீ., வனப்பரப்பில் ஏராளமான களாக்காய் விளைகிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் களாக்காய் விளைச்சல் தொடங்கும்.
கண் நோய்
இதனால்குணமாகும் இதர நோய்கள் கண் நோய் கண்ணில் ஏற்படும் வெண்படலமும், கரும்படலம், ரத்தப் படலம், சதை படலம் போன்ற நோய்கள் குணமாகும்.
வியர்வை பிரச்சனை
இதனுடைய வேரை பொடிசெய்து சர்க்கரை கலந்து 3 கிராம் காலை மாலை இருவேளை உண்டுவர பித்தம் தாகம் வியர்வை பிரச்சனை போன்றவை குணமாகும்
இரத்த சோகை
களாக்காய் நிறைய தாது சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் எ, சி, இரும்புசத்து இரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
பசி, மயக்கம்
களாக்காய் மந்தமான படி, பிரசவக் காலத்தில் பெண்களுக்கு அதிகம் ஏற்படும் வாந்தி, பித்த எரிச்சல், மயக்கம் போன்றவற்றை தடுக்க கூடியது ஆகும்.
பற்கள், ஈறுகள்
பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதை களாக்காய் தடுக்க கூடியது. இதிலிருக்கும் வைட்டமின் சி பசியை தூண்டும், ஈரலுக்கு வலிமை சேர்க்கும் மற்றும் மஞ்சள் காமாலை உண்டாகாமல் தடுக்கும்.
பித்தம் நீங்க
இக்காய்களை நன்றாகக்கழுவி துண்டுகளாக அரிந்து உப்பிட்டுக் குலுக்கி சிறிது சாப்பிட்டால் பித்தம் நீங்கும்..

