இந்த இதழில் இவ்வளவு நன்மையா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
ரோஜா பூக்களுக்கெல்லாம் அரசி. காதலின் சின்னம். அதன் அழகிற்கு ஈடு வேறெந்த பூவிற்கும் இல்லை என சொல்லலாம். காதல் முதல் கல்யாணம் வரை அதற்கென ஸ்பெஷலான இடம் எல்லாவற்றிலும் உண்டு. ரோஜா அழகுத் துறையிலும் கொடிக்கட்டிப் பறக்கிறது. சரும பொலிவிற்கு ரோஜாவின் இதழ்களே அதிகம் அழகு சாதனங்கள் தயாரிக்க பயன்படுகிறது
அழகில் மட்டுமா? உடல் நலத்திலும்தான். ரோஜாப் பூக்கள் பலவித மருத்துவ குணங்கள் கொண்டது. நோய்களை போக்கும் தன்மை பெற்றது. ஃபினைல் எத்தானல், க்ளோரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற மிக அருமையான வேதிச் சத்துக்கள் ரோஜாப் பூக்களில் அடங்கியுள்ளன.
மனதைக் கவரும் மலர்களில் பிரத்யேக இடம் எப்போதுமே ரோஜாவிற்கு உண்டு. அதிலும் குறிப்பாக இளம்பெண்களைக் கவரும் மலர் என்றால், அது ரோஜாதான். பல வண்ணங்களில் நம்மை மயக்கிக் கிரங்கடிக்கும் ரோஜாக்களை காணக் கண்கோடி வேண்டும்.
ரோஜா ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகைத் தாவர இனத்தைச் சேர்ந்தது. ரோஜாவில் பல வகையான பூக்களும், பலவித வண்ணங்களும் உண்டு. இதன் தண்டு பகுதி பெரும்பாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும். பெண்கள் பூவினை தலையில் சூடிகொள்ளவும், மாலையாக கோவில் பூஜையிலும் பயன்படுகிறது.
ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர சுவையையும், மணத்தையும் தரும். வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளையும் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கியத்தை வளர்க்கும்.
மூல வியாதிக்கு
ரோஜாக்கள் மூல வியாதிக்கு மருந்தாக பயன்படுகின்றது. மூல வியாதினால் உதிரப் போக்கு இருந்தாலுஇம் இது கட்டுப்படுத்துகிறது. ரோஜா இதழ்களை நீர்ல் சேர்த்து நன்றாக காய்ச்சி அந்த நீரை வடிக்கட்டி குடித்தால் நல்ல பலன் தரும்.
கர்ப்பப்பை வலுப் பெற
பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களுக்கு ரோஜா நல்ல மருந்தாகும். ரோஜா இதழ்களை சாப்பிடுவதால் உடல் இளமையாக இருக்கும். வாய் சுத்தமாகும்.
ரத்தம் சுத்தமாகும்
ரோஜா மொட்டுகளில் ஒரு கைப்பிடியளவு எடுத்து சுத்தம் செய்து நன்றாக மைப் போல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும்.
கரும்புள்ளி நோய்
இதனைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.
வாய்ப்புண்
புண்கள்குணமாக ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். இந்நீரை கொண்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமடையும்.
மலச்சிக்கல் பிரச்சனை
ரோஜா இதழ்களை சேகரித்து தேனிலோ அல்லது சர்க்கரை பாகிலோ ஊற வைத்து தினமும் சாப்பிட்டுவர இதயம் வலிமை பெறும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
தலைவலி மறைய
ரோஜா மலரின் சாற்றை ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தலாம். தலைவலி எந்த பக்கம் இருக்கிறதோ, அதற்கு நேரெதிர் நாசி துவாரத்தில் இதன் சாற்றை 2 துளிவிட உடனே தலைவலி மறைந்துபோகும்.
கண் நோய்
ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது.