நீரிழிவு நோய்க்கு அற்புத டீ! ஒரு நாளைக்கு 2 முறை குடித்தாலே போதுமாம்
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறப்படுகின்றது.
நெல்லிக்காய் பல ஊட்டச்சத்துக்களை கொண்டது. குறிப்பாக இது புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
இதனை சர்க்கரை நோயாளிகள் டீயாக எடுத்து கொண்டால் இன்னும் பல நன்மையே தரும்.
அந்தவகையில் தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்? இது எவ்வாறு உதவுகின்றது என்று பார்ப்போம்.
நீரிழிவு நோய்க்கு எப்படி உதவுகின்றது?
நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நெல்லிக்காயில் காணப்படுகின்றன, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதில் உள்ள நார்ச்சத்துகள் இரத்த ஓட்டத்தில் மெதுவாக குளுக்கோஸை வெளியிட வேலை செய்கின்றன.
மேலும் நெல்லிக்காயில் வைட்டமின் சி இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும்.
இது தவிர, நெல்லிக்காயில் இருந்து குரோமியம் என்ற தாது கிடைக்கிறது, இது குளுக்கோஸ் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
- முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- இப்போது அதில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் தூள் மற்றும் நசுக்கிய இஞ்சியை கலக்கவும்.
- இப்போது புதினா இலைகளைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு தேநீரை வடிகட்டி ஒரு கோப்பையில் பரிமாறவும்.
- இந்த டீயை நீங்கள் ஒரு நாளைக்கு 2 முறை குடிக்கலாம்.