சருமத்தை பால் போல வெண்மையாக மாற்றும் முட்டை ஓடு! இப்படி பயன்படுத்தி பாருங்க
பொதுவாக முட்டை உடைத்தவுடன் இதன் ஓடுகளை பலரும் தூக்கி ஏறிந்து விடுவார்கள். உண்டையில் முட்டை ஓடுகள் உங்கள் முகத்திற்கு பல நன்மைகளை செய்ய கூடியவையாக உள்ளன.
முட்டை ஓட்டில் 750 முதல் 800 மில்லி கிராம் வரை கால்சியம் சத்து உள்ளது. இது புதிய சருத செல்களை மீளுருவாக்கம் செய்ய ஊக்குவிக்கிறது. இவை சருமத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உங்கள் வயதை குறைக்கின்றன.
அதுமட்டுமின்றி முட்டையின் ஓடானது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. இதனால் சருமத்தின் அடியில் உள்ள தெளிவான மென்மையான சரும வெளிப்படுகிறது.
மேலும் உங்கள் சருமத்தை உறுதியாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது. எனவே முட்டை ஓட்டை சரும பராமரிப்பிற்கு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
சரும அழற்சிக்கு
2 முட்டை ஓடுகளை நொறுக்கி அவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் ½ கப் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்க்கவும். இந்த கலவையை 5 நாட்கள் ஊற வைக்கவும்.
இப்போது இந்த கலவையில் ஒரு பஞ்சை நனைத்து சருமத்தில் தேவையான இடங்களில் தடவவும். சில நிமிடங்கள் இதை அப்படியே வைத்துவிட்டு பிறகு முகத்தை கழுவவும். இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.
சரும துளைகளை சுருக்குவதற்கு
முட்டை ஓடுகளை நொறுக்கி அவற்றை முழுமையாக உலர வைக்கவும். நன்றான தூளாக்குவதற்காக அவற்றை அரைக்கவும். பிறகு அரைத்த தூளை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு முட்டையை எடுத்து அதில் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுக்கவும். முட்டை பொடியுடன் அந்த வெள்ளை கருவை நன்கு கலக்கவும். இப்போது அதை உங்கள் முகத்தில் தேவையான இடத்தில் தடவவும். பிறகு சற்று நேரம் அவை முகத்தில் உலர வைக்கவும். பின்பு குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு இருமுறை இதை செய்யலாம்.
கரும்புள்ளியை நீக்க
ஒரு பாத்திரத்தில் முட்டையை நொறுக்கி அதனுடன் 2 டீஸ்பூன் தேனை கலந்து கலவையாக்கவும் அதை முகமெங்கும் தடவி உலர வைக்கவும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு இருமுறை இந்த கலவையை பயன்படுத்தலாம்.
இறந்த சரும செல்களை அகற்ற
முட்டை ஓட்டை தூளாக்கி வைத்துக்கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து சிறிது நீர் விட்டு நன்கு கலக்கவும். உங்கள் முகத்தை நன்கு துடைத்து 5 நிமிடங்களுக்கு பிறகு இந்த கலவையை தடவிக்கொள்ளவும். இதை 10 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் வாரத்திற்கு ஒரு முறை இதை செய்யலாம்.
சரும நெகிழ்ச்சி தன்மைக்கு
முட்டை ஓடுகளை நொறுக்கி தூளாக்கி அவற்றை நன்கு உலர வைக்கவும். அதை அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அதில் 1 டீஸ்பூன் வெல்லத் தூளை சேர்க்கவும்.
இந்த கலவையை முகம் முழுவதும் தடவி அதை சுமார் 20 நிமிடங்கள் முகத்தில் உலர விடவும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இந்த செய்முறையை செய்யலாம். இந்த முறைகளை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் சிறந்த அழகான மிருதுவான சருமத்தை நீங்கள் பெற முடியும்.