காலை எழுந்ததும் தினம் ஒரு கப் பார்லி டீயை குடிச்சு பாருங்க.. இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்
பொதுவாக நமது தினசரி வாழ்வில் அங்கமான தேநீர் உள்ளது. இது பல நன்மைகளை கொண்டுள்ளது.
ஓவ்வொரு வகை தேநீரும் அதற்கு ஏற்றது போல் பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளன.
அதில் பார்லி தேநீரும் அடங்கும். இது பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் தற்போது இதனை தினசரி அருந்துவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
பார்லி தேநீரை எவ்வாறு செய்வது?
தேவையானவை:
- 2-3 டீஸ்பூன் வறுத்த பார்லி
- 4 கப் தண்ணீர்
- 1 டீஸ்பூன் தேன்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் வறுத்த பார்லியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- இந்த கலவையை 10 முதல் 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதன் பிறகு இதை குளிர விடவும்.
- இப்போது பார்லி தேநீர் நீங்கள் அருந்தத் தயாராக உள்ளது. தேவை என்றால் சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு மற்றும் தேனை சேர்த்துக் கொள்ளலாம். தினசரி வாழ்வில் இந்த பார்லி தேநீரை சேர்த்து இதன் ஆரோக்கிய பலன்களை பெறுங்கள்.
நன்மைகள்:
- இந்த பார்லி தேநீரில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், அமிலத்தன்மை, வாயு மற்றும் வீக்கம் பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது.
- இது குமட்டல் பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது. இந்த பார்லி தேநீரை அருந்துவது நமது ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
- இந்த பார்லி தேநீரில் குறைந்த கலோரி உள்ளது. மேலும் இதில் ஆரோக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் இது நமக்கு அதிக நேரம் பசி ஏற்படுத்துவதில்லை. இது போன்ற நன்மைகள் எடை இழப்புக்கு உதவுகிறது.
- இந்த பார்லி தேநீரில் அமினோ அமிலங்கள், மெலடோனின் மற்றும் டிரிப்டோபான் போன்ற கலவை உள்ளதால், இது ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் இதில் காஃபின் இல்லாததால் தூக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
- இந்த பார்லி தேநீரில் ஃபைபர் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் நிரம்பியுள்ளது. இது சில வகையான புற்றுநோய்களை தடுக்க உதவுகிறது. மேலும் இந்த தேநீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பது ஃப்ரீ ரேடிக்கல்கலால் ஏற்படும் செல் சேதத்தை தடுக்க உதவும்.
- பார்லி தேநீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அவை மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. மூட்டு வலி, வீக்கம், பாத வீக்கம் ஆகியவற்றை சரிசெய்யும். பாத வீக்கத்திற்கு இந்த தேநீரை வைத்து ஒத்தடமும் கொடுக்கலாம்.
- இந்த பார்லி தேநீரில் காய்ச்சலை குணப்படுத்தும் ஆக்சிஜனேற்றம் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருக்கின்றன. இது குளிர் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளை சமாளிக்க நமக்கு உதவுகிறது. மேலும் இது தொண்டை புண், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
- இந்த பார்லி தேநீரில் உள்ள பொதுவான நன்மைகள் ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து ஒழுங்குபடுத்த உதவுகிறது.
- இந்த பார்லி தேநீரில் உள்ள பண்புகள் மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக வியர்வை மற்றும் ஃபிளாஷ் போன்ற அறிகுறிகளை சரிசெய்கிறது. மேலும் தசை பிடிப்புகளையும் சரி செய்கிறது.
- ஓரல் ஸ்ட்ரெப்டோகாக்க்கஸ் என்பது பற்களின் சிதைவுக்கு காரணமாகும் ஒரு பாக்டீரியா ஆகும் . இந்த பார்லி தேநீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளதால் இது போன்ற பல்வேறு பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.
- இந்த பார்லி தேநீரில் நிறைந்துள்ள பொட்டாசியம், நியாசின், இரும்புச்சத்து, கால்சியம், போலிக் அமிலம் மற்றும் பிற கனிமங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்குகிறது.
- இந்த பார்லி தேநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.
- பார்லி பார்லி தேநீரில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அதிக சுத்திகரிப்பு ஆற்றல்களை கொண்டுள்ளது. இது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.