பிரித்தானியாவில் அனைத்து மளிகை கடைகளையும் மூட Amazon முடிவு
பிரித்தானியாவில் அமேசான் நிறுவனம் தனது அனைத்து மளிகை கடைகளையும் (Grocery Store) மூட திட்டமிட்டுள்ளது.
உலகின் முன்னணி ஓன்லைன் வணிக நிறுவனமான Amazon, பிரித்தானியானியாவில் உள்ள தனது 19 Grocery Store-யையும் மூடவுள்ளது.
2021-ல் Ealing Broadway-ல் தொடங்கப்பட்ட இந்த Amazon Fresh கடைகள், பில்லிங் கவுன்டர் இல்லாமல், வாடிக்கையாளர்கள் பொருட்களை எடுத்துகொண்டு வெளியேறலாம் என்ற தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கின.
அனால் அந்த முயற்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அமேசான் தெரிவித்ததன்படி, மூடப்படவுள்ள கடைகளில் 5 கடைகள் Whole Foods Market-ஆக மாற்றப்படும்.
Whole Foods என்பது அமேசானின் உடமையிலுள்ள ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் பிராண்ட் ஆகும்.
2026-க்குள் பிரித்தானியாவில் 12 Whole Foods கடைகள் அமைய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முடிவால் 250 ஊழியர்கள் பாதிக்கப்படலாம். அவர்களுக்கு மாற்று ஏழை வாய்ப்புகள் வழங்கப்படும் என அமேசான் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Amazon Grocery Stores, Amazon UK Stores closure, Amazon Fresh shut down