ஒரே ஒரு மணி நேரத்தில் iPhone டெலிவரி: Amazon Prime Air ட்ரோன் சேவை தொடக்கம்
அமேசான் தனது புதிய ட்ரோன் டெலிவரி சேவையான Prime Air-ஐ அமெரிக்காவின் சில நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் வெறும் ஒரு மணி நேரத்திலேயே பொருட்கள் வீட்டிற்கே வந்தடையச் செய்வதற்கான சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் அரிசோனா நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் தற்போது iPhone, Samsung Galaxy, AirPods, AirTags, Smart Rings, வீடியோ டோர் பெல் உள்ளிட்ட பல்வேறு இலகுரக எலக்ட்ரானிக் சாதனங்களை வெறும் 10 நிமிடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
MK30 ட்ரோன்கள் - மெதுவான, மேம்பட்ட டெலிவரி
இந்த ட்ரோன்கள் 13 அடி உயரத்தில் மிதந்து, பாதுகாப்பான இடங்களை சோதித்து பொருளை மெதுவாக தரையில் விடுகின்றன.
இதற்கு முன் QR குறியீடுகள் தேவைப்பட்ட நிலையில், தற்போது இயற்கையாகவே இடத்தை கண்டறியும் திறனுடன் ட்ரோன்கள் செயல்படுகின்றன.
Exciting update in drone delivery from Amazon: Prime Air is now expanding its selection to include popular electronics with lithium-ion batteries, like phones, AirTags, and even grilling thermometers.
— Amazon (@amazon) May 20, 2025
Customers who are in eligible areas for drone delivery in Texas and Arizona… pic.twitter.com/wQSpUTE4tu
60,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய முடியும். ஆனால், ஒரு பொருள் 2 கிலோகிராமிற்கு குறைவாக இருக்க வேண்டும்.
மேலும், 75 நிமிட வானிலை முன்னறிவிப்பு மூலம் தீவிர காலநிலை தடைகளை தவிர்க்கப்படுகிறது.
இந்த ட்ரோன் சேவை தற்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கின்றது என்றாலும், இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Amazon Prime Air India, iPhone drone delivery, Amazon MK30 drone features, Amazon drone delivery cities, Drone shipping for electronics, Amazon Prime Air launch, 1 hour delivery iPhone, Amazon drone delivery USA, Fastest Amazon delivery system, Future of drone e-commerce