ரூ.46 லட்சம் ஊதியத்தை உதறிவிட்டு ராணுவத்தில் இணைந்த பொறியாளர்
amazon engineer quits rs 46 lakh job to join indian army: அமேசானில் ஆண்டுக்கு ரூ.46 லட்சம் ஊதியம் பெற்று வந்த ஷர்தேந்து திவாரி, அதனை உதறிவிட்டு ராணுவத்தில் இணைந்துள்ளார்.
ராணுவத்தில் சேர ரூ.46 லட்சம் ஊதியத்தை உதறிய நபர்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் நீல்மதாவைச் சேர்ந்தவர் 27 வயதான ஷர்தேந்து திவாரி (shardendu tiwari).

அவரின் தந்தை ராஜ் குமார் திவாரி, 36 ஆண்டுகள் ராணுவத்தில் சேவையாற்றி விட்டு கௌரவ கேப்டனாக ஓய்வு பெற்றுள்ளார்.
இதனால், ஷர்தேந்து திவாரிக்கும் ராணுவத்தில் சேவை செய்ய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
ஷர்தேந்து திவாரி, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டத்தையும், கணினி அறிவியல் மற்றும் தகவல் பாதுகாப்பில் முதுகலைப் தொழில்நுட்பப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

அமேசான் நிறுவனத்தில், தொழில்நுட்பத் துறையில் ஆண்டுக்கு சுமார் ரூ. 46 லட்சம் ஊதியம் பெற்று வந்துள்ளார்.
அதேவேளையில், ராணுவத்தில் சேரும் தனது இலக்கை நிறைவேற்றவும் முயற்சித்து வந்துள்ளார். 8 முறை இராணுவத் தேர்வு செயல்முறைகளில் பங்கேற்ற அவருக்கு, தொழில்நுட்பப் பாதை வழியாக ராணுவத்தில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.
குடும்பப் பாரம்பரியம் என்ற காரணம் மட்டுமல்லாமல், சாகசம், தலைமைத்துவம் மற்றும் களப்பணி ஆகியவற்றின் காரணமாகவே ராணுவத்தில் சேர தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
OTA கயாவில் நடந்த பயிற்சியின் போதுஅவரது தலைமைப் பண்புகளை அங்கீகரிக்கும் விதமாக, அகாடமியின் மிக உயர்ந்த கேடட் பதவிகளில் ஒன்றான சீனியர் அண்டர் ஆபீசராக (SUO) அவர் நியமிக்கப்பட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |