அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்: சுமார் 68 மில்லியன் டொலருக்கு வாங்கிய பிரமாண்ட மாளிகை
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் புளோரிடா தீவில் உள்ள பங்களா ஒன்றை சுமார் 68 மில்லியன் டொலருக்கு வாங்கியுள்ளார்.
68 மில்லியன் டொலர்
பங்களா அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) புளோரிடாவின் பிரத்யேக தீவு ஒன்றில் உள்ள மெகா மேன்சன் ஒன்றை சுமார் மார் 68 மில்லியன் டொலருக்கு வாங்கியுள்ளார்.
தனது காதலி லாரன் சான்செஸ்-க்கு- சுமார் 2.5 மில்லியன் மதிப்புள்ள மோதிரத்தை பரிசாக வழங்கி ஜெஃப் பெசோஸ் காதலை தெரியப்படுத்திய ஒரு மாதத்திற்கு பிறகு, மூன்று பிரம்மாண்ட படுக்கையறை கொண்ட இந்த பங்களாவை அவர் ஜூனில் வாங்கியுள்ளார்.
Richard Shotwell/Invision/AP
ஃபாக்ஸ் பிசினஸ் அறிக்கைப்படி, 59 வயதுடைய அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கிட்டத்தட்ட 163 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துடன் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்.
தனி நிர்வாகம்
இந்தியன் க்ரீக் தீவில் அமைந்துள்ள இந்த மெகா மேன்சன், 1965ம் ஆண்டு கட்டப்பட்டு மீண்டும் 1985ம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2.8 ஏக்கரில் இந்த மேன்சன் மட்டும் சுமார் 9,259 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது.
The Mega Agency
மனிதரால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பு தீவுக்கென்று தனியான நகராட்சி, மேயர், பொலிஸ் அமைப்பு, போன்றவை உள்ளன.
கார்ல் இகான், இவான்கா டிரம்ப், டாம் பிராடி, ஜாரெட் குஷ்னர், மற்றும் ஜூலியோ இக்லேசியாஸ் போன்ற பிரபலங்கள் இந்த தீவில் சொத்துகளை கொண்டுள்ளனர்.
ஃபாக்ஸ் நியூஸ் செய்திகள் படி, முன்னாள் அமேசான் செயல் அதிகாரிகள் பழைய மாளிகையை முற்றிலும் தகர்த்துவிட்டு, அந்த இடத்தில் புதிய மெகா மாளிகையை அமைக்க திட்டமிடுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |