H-1B விசா ஊழியர்களை எச்சரித்த கூகிள், அமேசான், மைக்ரோசாப்ட்: இனி திரும்ப முடியாது
H-1B விசா ஊழியர்களை மீண்டும் அமெரிக்காவில் அனுமதிக்கப்படாமல் போகலாம் என்ற அச்சம் காரணமாக கூகிள், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் எச்சரித்துள்ளனர்.
நிச்சயமற்ற தன்மை
அந்த ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய குடியேற்றக் கொள்கைகள் தொடர்பில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மை காரணமாகவே H-1B விசா ஊழியர்களை எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க நிர்வாகம் ஆண்டுக்கு 65,000 H-1B விசா அணுமதி அளித்து வருகிறது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தும் சீனா, கனடா ஆகிய நாடுகளை அடுத்து மூன்றாமிடத்தில் இந்தியா உள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் சமீபத்தில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டும் தனிநபர்களின் விசாக்கள் மற்றும் கிரீன் கார்டுகளை ரத்து செய்தது. இந்த விவகாரம் புலம்பெயர்ந்த மென்பொருள் நிபுணர்களுக்கு அதிகரித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தொழில்நுட்ப சமூகம் அமெரிக்க கண்டுபிடிப்பு மற்றும் போட்டித்தன்மைக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அமெரிக்க கொள்கைக்கான தேசிய அறக்கட்டளையின் 2018 ஆம் ஆண்டு ஆய்வில்,
1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மதிப்புள்ள அமெரிக்க ஸ்டார்ட்அப்களில் பாதிக்கும் மேற்பட்டவை புலம்பெயர்ந்த நிறுவனர்களைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது.
விசா விதிமுறைகள்
இந்த நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் புலம்பெயர்ந்தோர் திறமைக்காக வாதிடும் அதே வேளையில், மற்றவர்கள் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ட்ரம்ப் கடுமையான விசா விதிமுறைகளை அமுல்படுத்துவதால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையின் விளைவாக இந்திய H-1B விசா வைத்திருப்பவர்கள் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
சில ஊழியர்கள், பொது இடங்களில் இருக்கும்போது எல்லா நேரங்களிலும் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |