பெண்களுக்கு கூடுதல் வட்டி - FD திட்டத்தை அறிமுகப்படுத்திய Amazon Pay
Amazon Payயில் Fixed Deposit திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமேசான் பே வழங்கும் FD திட்டம்
இந்தியாவில் தனது நிதிசேவைகளை விரிவுபடுத்தி வரும் அமேசான் நிறுவனம், நிலையான வைப்பு தொகை(Fixed Deposit - FD) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமேசான் பே (Amazon Pay) மூலமாக இந்த Fixed Deposit திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
இந்த திட்டத்தில், நாம் தேர்வு செய்யும் வங்கி மற்றும் முதலீட்டு காலத்தை பொறுத்து, ஆண்டுக்கு 8% வரை வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், சிவாலிக் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, ஸ்லைஸ் மற்றும் உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஆகிய 5 வங்கிகளும், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய 2 வங்கியில்லாத நிதி நிறுவனங்களும் இணைந்துள்ளன.
Amazon Launches 🚀 Fixed Deposits
— Vineeth K (@DealsDhamaka) January 5, 2026
Many small finance banks available #Investing pic.twitter.com/q8bXEbn7Ip
குறைந்த பட்சம் ரூ.1,000 மூலம், இந்த Fixed Deposit திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பெண் முதலீட்டாளர்களுக்கு 0.5% வரை கூடுதல் வட்டி வழங்குகிறது.
DICGCயின் ஒரு வைப்புத்தொகையாளருக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், இது ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |