அமேசானின் Prime Day sale தேதிகள் அறிவிப்பு!
2021-ஆம் ஆண்டுக்கான பிரைம் டே சேல் தேதிகளை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமேசானின் Prime Day sale விற்பனைகள் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி அடுத்த நாள் வரை நீடிக்கிறது. இந்த ஆண்டு 2 நாட்கள் பிரைம் டே சேல் நடைபெற இருப்பதால் பல்வேறு பொருட்களுக்கு அதிரடி சலுகைகள் மற்றும் கூடுதல் பம்பர் பரிசுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள அமேசான் நிறுவனம், வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கு உகந்த அளவில் பிரைம் டே சேல் இருக்கும் எனக் கூறியுள்ளது. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலால் நலிவடைந்த, வாழ்வாதார பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் சிறு குறு வியாபாரிகள், நெசவாளர்கள், தொழில் முனைவோர்கள், உற்பத்தியாளர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு பயன்படும் வகையில் இந்த பிரைம் டே சேல் இருக்கும் என தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் பிரைம் டே சேல் விற்பனையின் 5-வது ஆண்டு இதுவாகும். இதனை சிறப்பிக்கும் வகையில் அனைத்து பிரிவுகளிலும் டிஸ்கவுண்ட்ஸ் மற்றும் டீல்ஸ்கள் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 26-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்த விற்பனை தொடங்கி ஜூலை 27-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
இதுவரை சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், உபகரணங்கள், டிவிக்கள், சமையலறை, தினசரி அத்தியாவசிய பொருட்கள், பொம்மைகள், ஆடைகள், அழகு பொருட்கள் என பலவற்றில் எதிர்பார்க்காத அளவில் கூடுதல் சலுகைகளுடன் குறைந்த விலையில் கிடைக்கும்.
Samsung, Xiaomi, boAt, Intel, Wipro, Bajaj, Eureka Forbes, Adidas, FCUK, Max போன்ற சிறந்த பிராண்டுகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்பு அறிமுகங்கள் இந்தியாவில் கிடைக்கவுள்ளன. இதில் Prime உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அமேசான் பிரைம் டே சேலுக்கான டீல்கள் ஜூலை 8-ஆம் திகதி முதலே தொடங்கியுள்ளன. ஜூலை 24-ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் அமேசான் வெப்சைட்டில் டீல்களை தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய அறிவிப்புகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பொருட்களை பிரைம் சந்தாதாரர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
[TNEA4 ]
பிரைம் சந்தாதாரர்கள் பயன்படுத்தும் ஹெச்.டி.எப்.சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 விழுக்காடு டிஸ்கவுண்ட்டுகளும், இ.எம்.ஐ வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. Amazon pay-வை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1000-க்கான காஷ்பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. அமேசான் பே மூலம் ICICI கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 5 ரிவார்ட் பாயிண்டுகளும் உண்டு.
அமேசான் இந்தியாவின் தலைமை அதிகாரி அமித் அகர்வால் இதுகுறித்து பேசும்போது, அமேசான் பிரைம் டே சேலில் சிறுகுறு மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கான விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுடன் இணைந்து, விற்பனைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான ஒரு சிறு முயற்சி என தெரிவித்துள்ள அவர், இந்த இரண்டு நாட்களில் விற்பனையாளர்களும், வாடிக்கையாளர்களும் மகிழும் வகையில் சேல்ஸ் மற்றும் டீல்ஸ்கள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.