Amazon Prime Watch Party - வீட்டில் இருந்தபடியே நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பது எப்படி?
Amazon-ன் ப்ரைம் வீடியோ Watch Party எனும் புதிய அம்சம் ஸ்ட்ரீமிங் மற்றும் உரையாடலை ஒத்திசைக்கும், அதாவது நிகழ்நேரத்தில் மற்ற பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து நீங்கள் உரையாடலாம்.
இந்த கொரோனா காலகட்டத்தில், நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் பிடித்தவர்களுடன் உடலளவில் ஒருவருக்கொருவர் அருகில் இருக்க முடியாவிட்டாலும், அவ்வப்போது நண்பர்களுடன் விர்ச்சுவலாக சேர்ந்து குறிப்பிட்ட சில விஷயங்களை செய்வது மனதிற்கு ஆறுதல் அளிக்கும் ஒரு அற்புதமான விடயமாகும்.
அதிர்ஷ்டவசமாக இன்னும் ஒருபடி மேலே செல்ல விரும்புபவர்களுக்கு, இண்டர்நெட் வழியாக தனிப்பட்ட டிஜிட்டல் வாட்ச் பார்ட்டிகளை நடத்தும் நிறைய வழிகளும் உள்ளன. அவற்றில் ஒன்று தான் Amazon Prime Watch Party.
அமேசான் இந்தியா அதன் சொந்த வாட்ச் பார்ட்டி சேவையை தன் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது, இது Netflix வாட்ச் பார்ட்டியைப் போலவே வேலை செய்யும்.
அமேசான் ப்ரைம் சந்தாவுக்கு பணம் செலுத்திய பயனர்கள் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், டெக் நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு கன்டென்ட்களை தங்கள் நண்பர்களுடன் நிகழ்நேர அடிப்படையில் பார்க்க முடியும், அதே நேரத்தில் அவர்கள் எங்கிருந்தாலும் சாட் செய்யவும் முடியும்.
இதை எப்படி முயற்சி செய்து பார்ப்பது என்று குழப்பமாக இருக்கிறதா? இது Google Meet வழியாக உங்கள் வீட்டு பாடங்களைக் காண்பிப்பது போலவே மிகவும் எளிமையானது.
வாட்ச் பார்ட்டியை ஆரம்பிக்க உங்களிம் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் இருந்தால் போதும். இருப்பினும், அமேசானின் ப்ரைம் வீடியோ கலெக்ஷனில் இருந்து மட்டுமே டைட்டில்களை ஸ்ட்ரீமிங் செய்யும்படி மட்டுப்படுத்தப்படுவீர்கள். அதிர்ஷ்டவசமாக, அதில் 15,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்கள் உள்ளது.
ஒரு Watch Party தொடங்குவதற்கான வழிமுறைகள்:
முன்னரே குறிப்பிட்டபடி, ப்ரைம் வீடியோ வாட்ச் பார்ட்டி ஆனது ஸ்ட்ரீமிங் மற்றும் உரையாடலை ஒத்திசைக்கும், அதாவது நிகழ்நேரத்தில் மற்ற பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து நீங்கள் உரையாடலாம். இருப்பினும், இதை அனுபவிக்க, நீங்கள் ஒரு இணைப்பை (Link) பகிர வேண்டும். இதன் உள்ளமைக்கப்பட்ட சாட் டூல் ஆனது டெக்ஸ்ட் மற்றும் எமோடிகான்கள் என இரண்டையுமே ஏற்றுக்கொள்கிறது.
1 - உங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் அமேசான் ப்ரைம் வீடியோ இணையதளத்திற்குச் செல்லவும். மற்றவர்களையும் இணையதளத்திற்குள் செல்லுமாறு கோரவும்.
2 - நண்பர்களுடன் சேர்ந்து நீங்கள் பார்க்க விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது திரைப்படத்தின் தலைப்பை உள்ளிடவும்.
3 - மூவி டிஸ்க்ரிப்ஷன் பக்கத்தில், வாட்ச் பார்ட்டி செட்டிங்ஸ்-ஐ தேடி, அதைக் கிளிக் செய்யவும். மறுபுறம், சீரீஸின் சிங்கிள் எபிசோட்களுக்கான விருப்பமும் இருக்கும்.
4 - நீங்கள் நிகழ்ச்சியை பார்க்கும்போது நீங்கள் பேசக்கூடும் என்பதால், சாட் யூசர்நேமையும் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவீர்கள்.
5 - பெயர் செட் செய்யப்பட்ட பிறகு, ‘கிரியேட் வாட்ச் பார்ட்டி’ (Create Watch Party) பட்டனை கிளிக் செய்யவும்.
6 - நீங்கள் இப்போது குறிப்பிட்ட வாட்ச் லின்க்கை அதிகபட்சம் 100 பேருடன் பகிரலாம். இருப்பினும், அனைத்து பயனர்களும் ஒரு ப்ரைம் மெம்பராக இருக்க வேண்டும்.
7 - நீங்கள் அனுப்பிய யூஆர்எல்-ஐ கிளிக் செய்து ஒருவரால் குறிப்பிட்ட நிகழ்ச்சி / திரைப்படத்தை பார்க்க உங்களுடன் சேர முடியும், அனைவரும் தயாரானதும் வாட்ச் பார்ட்டியைத் தொடங்கலாம்.
ஒருவேளை நீங்கள் மற்றொருவரின் வாட்ச் பார்ட்டியில் சேர விரும்பினால், உங்களுக்குக் கிடைத்த இணைப்பை கிளிக் செய்து அமேசான் இணையதளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, 'சாட் ஆஸ்' என்கிற விருப்பத்தின் கீழ் உங்கள் யூசர்நேமை தேர்வு செய்து, பின் "ஜாயின் வாட்ச் பார்ட்டி" என்பதை கிளிக் செய்யவும், அவவ்ளவுதான்.