மீண்டும் 10,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்த அமேசான்
கடந்த நவம்பர் மாதம் 18,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய நிலையில், இன்னொரு 10,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்க அமேசான் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
AI இன் பயன்பாடு
நவம்பர் மாதம் 18,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய விவகாரம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டதுடன், தலைமை தகவல் அதிகாரி குர்மீத் சாதா தமது விரக்தியை சமூக ஊடக பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
வேலைக் குறைப்புகளுக்கு AI இன் அதிகரித்து வரும் பயன்பாடு குறித்து தனது அதிருப்தியை அவர் பதிவு செய்திருந்தார். மேலும் புதுமை என்ற பெயரில் பெருமளவிலான பணிநீக்கங்கள் நியாயப்படுத்தப்படுவதை சாதா கண்டித்துள்ளார்.
AI போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் வரக்கூடாது என்றும் அவர் வாதிட்டார். அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, செயல்திறனை மேம்படுத்த ஒரு குறிப்பிடத்தக்க மறுசீரமைப்பு முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையிலேயே சாதா தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் நடுத்தர மேலாளர்களில் 15% பேரைக் குறைக்கும் தனது இலக்கை ஜாஸி ஏற்கனவே தாண்டிவிட்டார். ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த சமீபத்திய நேர்காணலில், ஜாஸி இந்த நடவடிக்கையை ஆதரித்தார்,
ஒரு நிறுவனத்தில் அதிகமானோர் சேர்க்கப்படும்போது, அது அதிகப்படியான நடுத்தர நிர்வாகத்திற்கு வழிவகுக்கிறது என்று விளக்கமளித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |