பிரித்தானியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்ட பிரபல அமெரிக்க நிறுவனம்!
அமேசான் நிறுவனம் பிரித்தானியாவில் மேலும் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டின் இறுதியில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் பிரித்தானியர்களின் மொத்த எண்ணிக்கையை 55,000-ஆக உயர்த்த உள்ளதாக உறுதியளித்துள்ளது.
இந்த வேலைகள் லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க் மற்றும் கேம்பிரிட்ஜ் முழுவதும் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களிலும், அமேசான் வலை சேவைகள் மற்றும் செயல்பாடுகளிலும் இருக்கும் என்று நிறுவனம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை இங்கிலாந்து வணிகச் செயலாளர் குவாசி குவார்டெங் (Kwasi Kwarteng) வரவேற்றார், இது "பிரிட்டிஷ் பொருளாதாரத்த்தை மீட்டெடுப்பதில் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது" என்று கூறினார்.
முன்னதாக அமேசான் நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடாவில் 75,000 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.