DeepSeek தொழில்நுட்பம் உலகத்தை உலுக்கி வரும் நிலையில்.., AI, Chatgpt குறித்து இளைஞருக்கு அட்வைஸ் செய்த அம்பானி
Chatgpt , DeepSeek போன்ற ஏஐ தொழில்நுட்பத்தை இளைஞர்கள் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
முகேஷ் அம்பானி பேசியது
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எனப்படும் Artificial Intelligence வேகமாக பரவி வருகிறது.
அந்தவகையில் தற்போது சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள டீப்சீக் (DeepSeek) பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவில் தொழில்நுட்பங்கள் ரீதியாக கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி Artificial Intelligence குறித்து பேசியுள்ளார்.
குஜராத்தில் உள்ள பண்டித தீனதயாள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் மிகவும் வளமான நாடாக இந்தியா உருவெடுக்கும். அதற்கு இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடாது. விரைவில் நாம் எரிபொருள்களை விடுத்து எனர்ஜியை பயன்படுத்த தொடங்க வேண்டும்" என்றார்.
செயற்கை நுண்ணறிவு பற்றி பேசுகையில், "இளம் மாணவர்களுக்கு நான் ஒரு அறிவுரை கூறுகிறேன். ஏஐ தொழில்நுட்பம் ஒரு கருவி தான். உங்களின் முன்னேற்றத்தில் சுயசிந்தனை அவசியம்.
நீங்கள் கண்டிப்பாக ChatGPT ஐப் பயன்படுத்த வேண்டும், ஆனால் நமது சொந்த நுண்ணறிவு மூலம் மட்டுமே நாம் முன்னேற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். செயற்கை நுண்ணறிவு மூலம் அல்ல.
விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியில் கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் கற்றுக் கொள்வதை நிறுத்த கூடாது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |