மூன்று குடும்பங்கள் திரட்டி வைத்திருக்கும் சொத்து... பிரபல நாடொன்றின் மொத்த வருவாய்க்கு இணையானதாம்
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி உட்பட மூன்று குடும்பங்கள் திரட்டியுள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு என்பது பிரபலமான ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு(GDP) இணையானது என தகவல் வெளியாகியுள்ளது.
460 பில்லியன் அமெரிக்க டொலர்
இந்தியாவில் அம்பானி குடும்பம், பஜாஜ் மற்றும் பிர்லா குடும்பம் என மூன்றும் திரட்டியுள்ள சொத்துக்கள் அல்லது அவர்களின் மொத்த நிறுவனங்களின் மதிப்பு 460 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரியவந்துள்ளது.
இந்த தொகையானது சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இணையாக உள்ளது என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றர். முகேஷ் அம்பானி தலைமையில் அம்பானி குடும்ப நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ 2,575,100 கோடி என்றே குறிப்பிட்டுள்ளனர்.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் பஜாஜ் குடும்பம். இவர்கள் நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ 712,700 கோடி.
1926ல் நிறுவப்பட்ட பஜாஜ் நிறுவனத்தை தற்போது மூன்றாம் தலைமுறையை சேர்ந்த நீரஜ் பஜாஜ் முன்னெடுத்து செல்கிறார். மூன்றாவதாக பிர்லா குடும்பம், இவர்களின் ஆதித்ய பிர்லா குழுமத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ 538,500 கோடி.
உலோகங்கள் மற்றும் சுரங்க தொழிலில் ஈடுபட்டு வரும் பிர்லா குழுமம் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இவர்கள் மூவர் மட்டுமின்றி இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு பல குடும்பங்கள் தங்கள் பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.
அதில் ஒருவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா. இவர்கள் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ 430,600 கோடி. இவர்களுடன், ரூ 345,200 கோடி மதிப்புடன் மஹிந்திரா குடும்பம், ரூ 257,000 கோடியுடன் பிரேம்ஜி குடும்பம், ராஜீவ் சிங் குடும்பம் மற்றும் முருகப்பா குடும்பம் என பலர் தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |