ஒரே நாளில் ரூ.80,000 கோடி வருமானம்; மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி
ambani become asia richest 80000 cr profit in day: ரிலையன்ஸ் நிறுவனம் ஒரே நாளில் ரூ.80,000 கோடி வருமானம் ஈட்டியதன் மூலம், முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தை பிடித்துள்ளார்.
ஒரே நாளில் ரூ.80,000 கோடி வருமானம்
ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை, கடந்த ஜூன் மாதம் சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவன இணை நிறுவனர் யின்மின் முந்தி முதலிடம் பிடித்தார்.

தற்போது போர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவரிசையில் மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரராக முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார்.
ஒரே நாளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கிட்டத்தட்ட 12% உயர்ந்ததன் விளைவாக அவரது நிகர சொத்து மதிப்பு 8.5 பில்லியன் டொலரை(இந்திய மதிப்பில் ரூ.80,603 கோடி ) அதிகரித்து, 88.8 பில்லியன் டொலராக ( இந்திய மதிப்பில் ரூ.8.35 லட்சம் கோடி ) உயர்ந்துள்ளது.
இதன் மூலம், உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 22வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
84 பில்லியன் டொலர் நிகர மதிப்புடன் யிமிங் 25வது இடத்திலும், அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி 80.1 பில்லியன் டொலர் நிகர மதிப்புடன் 26-வது இடத்திலும் உள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 2.7 பில்லியன் டொலர் காலாண்டு வருவாயைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அதன் பங்கு விலை கிட்டத்தட்ட 12% உயர்ந்து, அதன் சந்தை மதிப்பில் 19 பில்லியன் டொலருக்கும் மேல் அதிகரித்தது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், கடந்த அக்டோபர் இறுதியில் மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தையில் தனது முதல் வர்த்தகத்திலேயே 27% உயர்ந்ததைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இந்த ஏற்றம் வந்துள்ளது.
இந்நிறுவனத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 66% பங்குகளைக் கொண்டுள்ளது.