ரிலையன்ஸ் குழுமத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் அம்பானி குடும்ப உறுப்பினர் இவர் தான்
இந்தியா மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
அந்த அம்பானி குடும்ப உறுப்பினர்
ரிலையன்ஸ் குழுமம் மொத்தமாக பல துறைகளில் களமிறங்கி சிறப்பாகவே செயல்பட்டும் வருகிறது. சமீபத்தில் தான் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் அதிகபட்ச பங்குகளை வைத்திருக்கும் அந்த அம்பானி குடும்ப உறுப்பினர் யார்? மற்றும் அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
உண்மையில் அம்பானி குடும்பத்தில் அதிகபட்ச பங்குகளை சொந்தமாக வைத்திருப்பவர் முகேஷ், நீதா அல்லது அவர்களது பிள்ளைகள் எவரும் அல்ல என்றே கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு என்பது 117 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரிய வருகிறது. ரிலையன்ஸ் குழுமத்தில் அம்பானி குடும்பத்தினர் 50.39 சதவீத பங்குகளை கைவசம் வைத்துள்ளனர்.
சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள்
எஞ்சிய 49.61 சதவிகித பங்குகள் பொதுமக்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் கைவசம் வைத்துள்ளன. இதில் அதிகபட்ச பங்குகளை வைத்திருப்பவர் முகேஷ் - அனில் அம்பானியின் தாயாரான கோகிலாபென் அம்பானி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 1,57,41,322 பங்குகளை கோகிலா அம்பானி தன் வசம் வைத்துள்ளார். இது ரிலையன்ஸ் குழுமத்தின் 0.24 சதவிகிதம் என்றே கூறப்படுகிறது. மேலும் முகேஷ் அம்பானியின் மூன்று பிள்ளைகளும் மொத்தமாக 0.12 சதவிகித பங்குகளை கைவசம் வைத்துள்ளனர்.
இதன் எண்ணிக்கை 80,52,021 என்றே கூறப்படுகிறது. கோகிலா அம்பானி சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் தொடர்பில் பொதுவெளியில் தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், அவரது சொத்து மதிப்பு சுமார் 18,000 கோடியாக இருக்கலாம் என்றே சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |