ரூ. 15000 கோடி மதிப்புள்ள வீட்டில் 27ஆவது மாடியில் வசிக்கும் அம்பானி.., ஏன் தெரியுமா?
உலகளவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு எண்ணிலடங்கா தொழில்கள் இருக்கின்றன.
இவரது பிள்ளைகள், மனைவி நீடா அம்பானி என அனைவருமே பெரும் தொழிலதிபர்களாக இருக்கின்றனர்.
அம்பானி, தனது குடும்பத்தாருடன் மும்பையில் இருக்கும் கும்பலா மலையில் இருக்கும் அல்டமவுட்ன் சாலையில் இருக்கும் ஆண்டிலியா எனும் வீட்டில் தங்கியிருக்கிறார்.
உலகத்தரம் வாய்ந்த இந்த ஆன்டிலியா வீட்டில் மொத்தம் 27 கட்டடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், 50க்கும் மேற்பட்ட பெட்ரூம்கள், 168 கார் பார்க்கிங், 9 அதிவேக லிஃப்ட், தியேட்டர், மொட்டை மாடி தோட்டங்கள், நீச்சல் குளங்கள், ஸ்பா, சுகாதார மையங்கள், கோவில், அலுவலகங்கள் என பல்வேறு அம்சங்கள் இந்த வீட்டில் நிறைந்துள்ளது.
எவ்வளவு பெரிய பூகம்பம் வந்தாலும் இந்த பில்டிங்கிற்கு ஒன்றும் ஆகாது. இந்த வீட்டின் அமைப்பு தாமரை மற்றும் சூரியனை மையப்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
இந்த வீட்டின் மொத்த மதிப்பு மட்டும் தற்போது ரூ.15000 கோடி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ஆடம்பர வீட்டில் அவர்கள் 27ஆவது மாடியில் வாசிப்பதற்கான காரணத்தை நீதா அம்பானி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது மும்பையில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்.
எனவே வெளிப்புறங்களில் இருந்து வரும் தூசி மற்றும் சத்தத்திலிருந்து விலகி இருக்க 27வது மாடியை தேர்வு செய்தோம் என்று நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு அறையிலும் இயற்கையான காற்று மற்றும் அமைதியான சூழல் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் இந்த தளத்தில் வசித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |