ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கடந்த வார பங்கு உயர்ந்ததன் காரணமாக ரூ.48,000 கோடி லாபம் பெற்றுள்ளது.
உயர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு
கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தையில் நிலவிய ஏற்ற நிலை காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சந்தை மூலதனத்தில் உயர்வை கண்டனர்.
அந்த வகையில், இந்தியாவின் முன்னணி தொழில்துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கணிசமான பங்கு உயர்ந்ததை அடுத்து அதன் சந்தை மதிப்பில் ரூ.48,000 கோடி லாபம் அடைந்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் அதிக மதிப்பு கொண்ட நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த பங்குகளின் உயர்வு காரணமாக, வெள்ளிக்கிழமை நிலவரப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த நிகர மதிப்பு சுமார் ரூ.19,07,131.37 கோடியாக உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி ரிலையன்ஸின் சந்தை மதிப்பு சுமார் ரூ.19.11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸை தொடர்ந்து, HDFC மற்றும் TCS நிறுவனங்கள் அதிக மதிப்பு கொண்ட நிறுவனங்களாக உள்ளன.
லாபம் ஈட்டிய நிறுவனங்கள்
இந்திய பங்குச் சந்தையின் இந்த ஏற்றம் காரணமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS), பார்தி ஏர்டெல்(AIRTEL), ஐசிஐசிஐ வங்கி(ICICI Bank) ஆகிய நிறுவனங்களும் லாபம் ஈட்டியுள்ளது.
அதே நேரத்தில் எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(SBI) ஆகிய நிறுவனங்கள் கடந்த வாரத்தில் சரிவை சந்தித்தன.
முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு
பல்துறை நிறுவனங்களை உள்ளடக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் நிகர சொந்து மதிப்பு சுமார் $105.7 பில்லியன் ஆகும்.
இதன் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வராக முகேஷ் அம்பானி திகழ்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |