ரஷ்ய எண்ணெய் விவகாரத்திற்கு மத்தியில்.., அம்பானியின் நிறுவனம் ரூ.180 பில்லியன் திரட்ட திட்டம்
ரஷ்ய எண்ணெய் விவகாரத்திற்கு மத்தியில் ரிலையன்ஸ் குழுமம் ரூ.180 பில்லியன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
ரூ.180 பில்லியன் ஒப்பந்தம்
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சொத்து சார்ந்த பத்திரங்கள் மூலம் சுமார் ரூ.180 பில்லியன் (USD 2.06 பில்லியன்) திரட்ட திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.
இது அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும், நிறுவனம் பத்திரங்களை கையாளும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதாவது இது ஒரு அறக்கட்டளையால் வழங்கப்படும் மற்றும் கூட்டு நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு பிரிவுகளுடன் இணைக்கப்பட்ட கடன்களின் தொகுப்பால் ஆதரிக்கப்படும்.
மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்ட இருக்கும் இந்த ஒப்பந்தத்தின் பரிவர்த்தனையை Barclays Plc ஏற்பாடு செய்து வருகிறது
இது குறித்து ரிலையன்ஸ் மற்றும் பார்க்லேஸ் ஆகிய இரண்டும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு எண்ணெய் வாங்குவதில் ரிலையன்ஸ் முன்னணியில் உள்ளது. அதே நேரம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்கா வரி விதித்ததைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.
சமீபத்தில் டிரம்ப் நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக, எரிசக்தித் துறையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டதாக வெளிப்படுத்தினார் அனந்த் அம்பானி.
இருப்பினும், நிறுவனம் ஆரோக்கியமான லாபத்தை அறிவித்த நிலையிலும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய மகாராஷ்டிராவின் நகோத்தேன், தஹேஜ் மற்றும் பால்கரில் புதிய திட்டங்களில் ரூ.75,000 கோடியை ($8.8 பில்லியன்) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும், பசுமை எரிசக்தி முதலீடுகளில் நிறுவனம் கவனம் செலுத்துவதாக கூறிய அவர் எண்ணெய்-தொலைத் தொடர்பு கூட்டு நிறுவனம் பசுமை எரிசக்தி முதலீடுகளில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.
அதோடு குஜராத்தின் கட்ச்சில், 5,50,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய சூரிய ஒளி திட்டத்தை நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் கூறினார் ஆனந்த் அம்பானி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |