ரிலையன்ஸ் சொத்து ஆதரவு பத்திரங்கள் வெளியீடு: ரூ.180 பில்லியன் கோடி திரட்ட அம்பானி முடிவு!
ரிலையன்ஸ் நிறுவனம் தனது $2 பில்லியன் சொத்து ஆதரவு பத்திரங்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் சொத்து ஆதரவு பத்திரங்கள்
முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.180 பில்லியன் அதாவது ($2.06 பில்லியன் டொலர்) திரட்டுவதற்காக தங்களது சொத்து பத்திரங்களை வெளியிட இருப்பதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
நம்பகமான டிரஸ்ட் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தங்களது உள்கட்டமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு பிரிவுகளின் சொத்து ஆதாரங்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சொத்து ஆதார பத்திர ஒப்பந்தத்தின் முதிர்வு காலமானது 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கும் எனவும், செப்டம்பர் மாதம் நடுவில் இது நிறைவடையும் எனவும் ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.
அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக ரிலையன்ஸ் மற்றும் பார்க்லேஸ் பிஎல்சி ஆகிய இரண்டு நிறுவனங்களும் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |