UAE-யில் கால்பதிக்கும் ரிலையன்ஸ்! 15 நிமிடத்தில் டெலிவரி! பிரபல நிறுவனத்துடன் கூட்டு
முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுகர்பொருள் சந்தையில் காலெடுத்து வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
UAE-யில் கால்பதிக்கும் ரிலையன்ஸ்
முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக விளங்கி வருகிறது.
பிப்ரவரி 19 ஆம் திகதி நிலவரப்படி, ரூ. 16.62 லட்சம் கோடி சந்தை மதிப்பீட்டுடன் ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய வணிக சந்தையில் அசைக்க முடியாத வலிமையுடன் காணப்படுகிறது.
இந்நிலையில் முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வேகமாக நகரும் நுகர்பொருள் சந்தையில் தனது நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் குட்ஸ் லிமிடெட்(Reliance Consumer Goods Limited), தனது Campa பானங்களின் விரைவான டெலிவரியை வழங்குவதற்காக 'நூன் மினிட்ஸ்’('noon Minutes') உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
15 நிமிடங்களுக்குள் டெலிவரி
இந்த பிரத்யேக இணையதள வர்த்தக(e-commerce) ஒப்பந்தம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நுகர்வோர்கள் நூன் சூப்பர் ஆப்(noon superapp) மூலம் அணுகக்கூடிய நூன் மினிட்ஸ்(noon Minutes) மூலம் கேம்பா கோலா, கேம்பா லெமன் மற்றும் கேம்பா ஆரஞ்சு ஆகியவற்றை பிரத்யேகமாக வாங்க அனுமதிக்கிறது.
இந்த கூட்டாண்மை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் 15 நிமிடங்களுக்குள் டெலிவரியை உறுதியளிக்கிறது.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட்டின் COO-வான கேதன் மோடி, கேம்பா-நூன் மினிட்ஸ் கூட்டாண்மை குறித்து உற்சாகம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அவர்களின் வளர்ச்சி மூலோபாயத்தில் இ-காமர்ஸின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |