முகேஷ் அம்பானியின் Reliance, மார்க் ஜூக்கர்பெர்க்கின் Meta இடையே கையெழுத்தான பாரிய ஒப்பந்தம்
தொழிலதிபர்க எப்போதும் தாங்கள் எதைச் செய்தாலும் வணிகப் பலன்களைத் தேடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
சமீபத்தில் ஜாம்நகரில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து பெரும் தொழிலதிபர்கள் வந்தது தெரிந்ததே.
ஆனால், இந்தகே கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தொழிலதிபர்களின் வியாபாரமும் நடந்துள்ளது தெரியுமா?
ஆம், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவிஐபிக்களில் Facebook CEO மார்க் ஜூக்கர்பெர்க்கும் (Mark Zuckerberg) ஒருவர்.
இந்த நிகழ்வின் போது, முகேஷ் அம்பானியின் Reliance ஜுக்கர்பெர்க்கின் Meta-வுடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு பாரிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்த நிகழ்ச்சியில் கோடீஸ்வரர் கலந்துரையாடிய பின்னர், ரிலையன்ஸ் சமீபத்தில் மெட்டாவுடன் ஒரு பாரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி, Meta இப்போது இந்தியாவில் அதன் முதல் தரவு மையத்தை சென்னையில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் அமைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
20,10,000 கோடிக்கு மேல் சந்தை மூலதனத்துடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனமாகும்.
Meta தற்போது இந்தியாவில் 314.6 மில்லியனுக்கும் அதிகமான Facebook பயனர்களையும், 350 மில்லியனுக்கும் அதிகமான Instagram பயனர்களையும் மற்றும் 480 மில்லியன் WhatsApp பயனர்களையும் கொண்டுள்ளது. இந்த தொகை அமெரிக்காவில் உள்ள பயனர்களை விட கிட்டத்தட்ட இருமடங்காகும்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நிறுவனத்தின் ஒரே மையமான சிங்கப்பூரில் மெட்டா தயாரிப்புகளின் இந்திய பயனர்களின் அனைத்துத் தரவுகளும் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்தியாவில் ஒரு புதிய தரவு மையம் திறப்பது அதன் மிகப்பாரிய சந்தையில் மெட்டாவின் தரவு செயலாக்கத்தை துரிதப்படுத்தும்.
தரவு மைய பரிமாற்றச் செலவுகளைக் குறைக்கும் அதே வேளையில் உள்ளூர் விளம்பரம் பயனர் அனுபவத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 10 ஏக்கர் MAA10 வளாகம் 100 மெகாவாட் (MW) ஐடி சுமையை கையாளக்கூடியது. இது Brookfield Asset Management, Reliance Industries மற்றும் Digital Realty ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mukesh Ambani, Reliance Meta Deal, Mukesh Ambani Mark Zuckerberg Deal, META CEO Mark Zuckerberg, Reliance Industries, Chennai Ambattur Industrial Estate, Anant Amabni Radhika Merchant Pre Wedding ceremony