குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமம் விற்பனை! அதானி vs அம்பானி இடையே கடும் போட்டியா?
IPL-லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கான உரிமையை பெற இந்தியாவின் முன்னணி பில்லியனர்களான முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பான்மை பங்குகளை விற்பனை
தங்கள் முதல் ஐபிஎல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, உரிமையாளர் மாற்றத்தை சந்திக்க இருக்கிறது.
தற்போதைய உரிமையாளரான CVC Capital பங்குகள், அணியின் பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளது.
இந்த முடிவு, பிசிசிஐ அமைப்பின் புதிய அணிகளுக்கான கட்டுப்பாட்டு காலம் 2025 பிப்ரவரியில் முடிவடைவதால் எடுக்கப்பட்டுள்ளது.
அம்பானி vs அதானி
குஜராத் அணியின் உரிமம் பங்குகள் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், அதனை இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கவுதம் அதானி வாங்க இருப்பதாக தகவல்கள் நேற்று வெளியாகின.
இந்நிலையில் இந்தியாவின் செல்வந்தர்களான முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்) மற்றும் கவுதம் அதானி (அதானி குழுமம்) ஆகியோர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் பெரும்பான்மை பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவுதம் அதானி தனது கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அகமதாபாத் மகளிர் பிரீமியர் லீக் (WPL) அணியை வாங்குவதன் மூலமும், ஐக்கிய அரபு அமீரகத்தின் டி20 லீக்கில் முதலீடு செய்வதன் மூலமும் காட்டியுள்ளார்.
அணியின் தற்போதைய மதிப்பு
இந்த சாத்தியமான ஏல போர், ஐபிஎல் தொடரின் நிதி ஈர்ப்பு அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது, தற்கு சமீபத்திய ₹16.4 பில்லியன் மீடியா உரிமை ஒப்பந்தமே சான்று.
டைட்டன்ஸ் அணியின் தற்போதைய மதிப்பு $1 பில்லியன் (கடந்த லீக்கில் எட்டாவது இடம்) என்றாலும், அடுத்த ஊடக உரிமை சுழற்சியில் 2027 ஆம் ஆண்டில் இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |