அம்பானி வீட்டு திருமணம்: விருந்தினர்களுக்கு ரூ 1.5 கோடிக்கு கைக்கடிகாரம் பரிசு
ஆனந்த் அம்பானி தனது திருமண விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர்களுக்கு ரூ. 1.5 கோடி மதிப்பிலான, தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட ஆடமர் பிகுவேட் கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.
விருந்தினர்களுக்கு ஆடம்பர பரிசுகள்
ஆனந்த அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த திருமண விழாவில் சல்மான் கான், ரஜினிகாந்த், ஷாருக் கான், மற்றும் உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆனந்த் அம்பானியின் இந்த திருமண விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மட்டும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான, தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட ஆடமர் பிகுவேட் கைக்கடிகாரங்களை(Audemars Piguet watches) பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.
இணையத்தில் பரவும் வீடியோ
இணையத்தில் பரவி வரும் காணொளிகளில், ஷாருக்கான், ரன்வீர் சிங், சிக்கர் பஹரியா மற்றும் பல பிரபலங்கள் திருமண விழாவில் பங்கேற்ற பிறர் இந்த கடிகாரங்களை அணிந்திருப்பதை காணலாம்.
இந்த கடிகாரங்களில் 18 கேரட் ரோஸ் தங்க உறை, கையெழுத்து பாணி கிராண்ட் டேபிஸ்ட்ரி வடிவமைப்பு கொண்ட ரோஸ் தங்க டைல், நீல நிற அலங்காரங்கள் என தனித்துவமான அம்சங்கள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |