அம்பானியின் Antilia வீடு தொடர்பில் புதிய சர்ச்சை: ரூ.21 கோடிக்கு வாங்கப்பட்ட நிலம்
அம்பானி குடும்பத்தின் Antilia வீடு கட்டப்பட்டுள்ள நிலம் தொடர்பில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்தியாவின் மிகச் செழிப்பான இல்லமாக கருதப்படும் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி வசிக்கும் Antilia என்ற மாளிகை, இன்று ரூ.15,000 கோடிக்கு மேல் மதிப்பு கொண்டிருப்பது பலரும் அறிந்திருக்கக்கூடும்.
ஆனால், இந்த மாளிகை கட்டப்பட்ட நிலத்தின் உரிமை தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
AIMIM தலைவர் அசாதுதின் ஒவைசி, இந்த நிலம் வஃக் வாரியத்தின் சொத்து என்றும், அதை தனிப்பட்ட பயன்பாட்டுக்காக விற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவல்களின் படி, கரீம் பாய் இப்ராஹிம் என்பவர் இந்த நிலத்தை 1986-ஆம் ஆண்டு மத, கல்வி மற்றும் அனாதை நல நோக்கங்களுக்காக வஃக் வாரியத்துக்கு தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனை முகேஷ் அம்பானி, 2012-ஆம் ஆண்டு ரூ.21 கோடியில் வாங்கியதாக செய்திகள் கூறுகின்றன. இந்த நிலத்தில் அவரது சொகுசு மாளிகையான ஆன்டிலியா கட்டப்பட்டுள்ளது.
ஆனால் வஃக் வாரியத்தின் சொத்துகளை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக விற்க முடியாது என Action Taken Report (ATR) ஒன்றில் மஹாராஷ்டிரா சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நில விவகாரம் மீண்டும் விவாதத்தை தூண்டியுள்ள நிலையில், அரசியல் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Antilia land controversy, Mukesh Ambani Waqf land case, Antilia house real owner, Waqf Board vs Ambani, Antilia land price, Mukesh Ambani Rs 21 crore land, Kareem Bhai Ibrahim land donation, Waqf land dispute Mumbai, Antilia house controversy 2025, Mukesh Ambani house land issue