கனடா-அமேரிக்கா இடையிலான அம்பாசிடர் பாலத்தில் வெடிபொருட்களுடன் சிக்கிய கார்! தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட போக்குவரத்து., பின்பு நடந்தது என்ன?
கனடா மற்றும் அமெரிக்கா இடையே பரபரப்பான அம்பாசிடர் பாலத்தில் கொண்டுவரப்பட்ட கார் ஒன்றில் வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதால், திங்களன்று சுமார் மூன்று மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து மூடப்பட்டது.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கடலோர எல்லை நகரமான Windsor மற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள Detroit நகரத்தை இணைக்கும் பிரம்மாண்ட பாலம் தான் Ambassador பாலம்.
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையே மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய இந்த சர்வதேச பாலத்தில், திங்கட்கிழமை அதிகாரிகள் ஒரு காரை ஆய்வு போது, அதில் சாத்தியமான வெடிபொருட்கள் கண்டறியப்பட்டதாக வின்ட்சர் பொலிஸார் தெரிவித்தனர்.
Photo: Rob Gurdebeke
உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் இந்த சோதனை நடந்தது. இதனால் பாதுகாப்பது காரணங்களுக்காக கிட்டத்தட்ட 3 மணி நேரமாக பாலத்தின் இருபுறமும் போக்குவரத்து மூடப்பட்டது.
மேலும், அதனை சுற்றியுள்ள Blue Water பாலம் மற்றும் Port Huron பகுதிகளிலும் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியேற்றப்பட்டன.
பாலத்தில் வெடிபொருட்களுடன் வந்த காரை பொலிஸார் சோதனை செய்து கைப்பற்றினர். மேலும் அந்த காரை ஓட்டிவந்த நபரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
Photo: Carlos Osorio
பிறகு பிற்பகல் 1.30 மணிக்கு மேல் முழுமையான சோதனைகளுக்கு பிறகு பாலத்த்தில் மீண்டும் போக்குவரத்து துவங்கப்பட்டது.
பின்னர், மதியம் 2.30 மணியளவில், கைது செய்யப்பட கார் ஓட்டுநர் சிபிஎஸ்ஏவின் காவலில் இருப்பதாகவும் "மேலதிக விசாரணை நிலுவையில் உள்ளது" என்றும் "வேறு எந்த நபர்களுக்கும் தொடர்பு இல்லை என்று நம்பப்படுகிறது" என்றும் பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.
மேலும் "ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது; போக்குவரத்து மீண்டும் மாற்றப்பட்டுள்ளது" என அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, கனடா பார்டர் சர்வீசஸ் ஏஜென்சி (CBSA) மாலை 5 மணிக்கு முன்னதாக பதிவிட்ட ட்வீட்டில், பாலத்தில் இயல்பான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன என்று தெரிவித்தனர்.Photo: Rob Gurdebeke
Photo: Rob Gurdebeke