ருத்துராஜ் கெய்க்வாட் இல்லை - சென்னை அணியில் இந்த வீரர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய 2 வீரர்கள் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த கடந்த வருடம் நடைபெற்ற தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் இம்முறை அந்த அணியின் நிலைமை பரிதாபமாக உள்ளது.
காரணம் அந்த அணியில் தீபக் சாஹர், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் காயம் காரணமாக விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை அணி தான் தேர்ந்தெடுத்த வீரர்களை வைத்து எப்படி அணியை கட்டமைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள அம்பத்தி ராயுடு மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய இரண்டு வீரர்களின் முக்கியத்துவம் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது இவர்கள் இருவரும் சென்னை அணிக்காக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக களம் இறங்குவார்கள்.
மேலும் டூபிளசிஸ் இல்லாத சென்னை அணிக்கு தொடக்க வீரராக டிவான் கான்வே விளையாடுவார் எனவும், சென்னை அணி சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது என்றும் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.