கொண்டாட்டம் மட்டுமே கோப்பையை வெல்லாது! RCB அணியை சாடிய முன்னாள் சென்னை வீரர்
கொண்டாட்டங்களாலும், ஆக்ரோஷத்தினாலும் ஐபிஎல் கிண்ணங்கள் வெல்லப்படுவதில்லை என முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பத்தி ராயுடு சாடியுள்ளார்.
தகர்ந்த கனவு
ஐபிஎல் 2024யின் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியுற்றது.
இதனால் RCB அணியின் 17 ஆண்டுகால ஐபிஎல் கிண்ண கனவு தகர்ந்தது. தோல்வியால் அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு (Ambati Rayudu) பெங்களூரு அணியை சாடியுள்ளார்.
அம்பத்தி ராயுடு
அவர் கூறுகையில், ''இன்று நீங்கள் RCB பற்றி பேசினால் ஆர்வமும், கொண்டாட்டங்களும் மட்டுமே உங்களுக்கு கோப்பைகளை வெல்லாது என்பதை இது காட்டுகிறது. நீங்கள் திட்டமிட வேண்டும். Playoff சுற்றுக்கு வந்ததால் ஐபிஎல் கிண்ணத்தை நீங்கள் பெறவில்லை. அதே பசியுடன் விளையாட வேண்டும்.
CSKவை வீழ்த்தி ஐபிஎல் கிண்ணத்தை வெல்வேன் என்று நினைக்க வேண்டாம். அடுத்த ஆண்டு மீண்டும் ஒருமுறை வர வேண்டும். அவர்கள் இந்தியர்களின் திறமை மீது அதிக நம்பிக்கை காட்ட வேண்டும்.
கடந்த 16 ஆண்டுகளில் விராட் கோலியைத் தவிர வேறு எந்த இந்திய வீரரும், 1000 ஓட்டங்களுக்கு மேல் அடித்ததில்லை என்று நான் நினைக்கவில்லை மற்றும் விராட் 8000 ஓட்டங்களுக்கு மேல் அடித்துள்ளார். இது உங்களுக்கு இந்திய திறமை மீது நம்பிக்கையை இல்லை என்பதையே காட்டுகிறது'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |