துடுப்பாட்ட வீரரின் தாமதம்..கோபத்தில் சண்டையிட்ட அம்பத்தி ராயுடு..வெளியான வீடியோ
சவுராஷ்டிரா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பரோடா அணியை வென்றது
பரோடா அணி கேப்டன் அம்பத்தி ராயுடு முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்
சையத் முஸ்தாக் அலி போட்டியில் அம்பத்தி ராயுடு துடுப்பாட்ட வீரர் ஷெல்டன் ஜாக்சனிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
பரோடா மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடந்தது. இந்தப் போட்டியில் சவுராஷ்டிரா அணி வீரர் துடுப்பாட்டம் செய்ய தாமதம் செய்தார்.
இதனால் கோபமடைந்த பரோடா அணியின் கேப்டன் அம்பத்தி ராயுடு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
— cricket fan (@cricketfanvideo) October 12, 2022
நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் இருவரின் மோதலை தடுத்து தனித்தனியே அழைத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.