ஐபிஎல் 2022! CSK அணிக்கு திரும்பும் அதிரடி நட்சத்திர வீரர்... இது டோனியின் மெகா ப்ளான்
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிரடி வீரர் ஒருவர் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022ம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் வாங்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.
அந்த அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா, டோனி, ருதுராஜ் கெயிக்வாட், மொயீன் அலி ஆகியோரை தக்கவைத்துள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான அம்பத்தி ராயுடுவை மீண்டும் ஏலத்தில் எடுக்க அதிக கவனம் செலுத்தப்போவதாக தகவல் கசிந்துள்ளது.
சென்னை அணிக்காக அவர் கடந்த 4 சீசன்களாக விளையாடிய போதும், இந்தாண்டு கழட்டிவிடப்பட்டார். மிடில் ஆர்டரில் மிக சிறப்பாக விளையாடுபவர் என்ற பெயரை பெற்றவராக ராயுடு உள்ளார்.
அவரை மீண்டும் அணிக்குள் எடுக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிகிறது. இது தொடர்பில் பேசிய ராயுடு, சிஎஸ்கேவுக்காக விளையாடுவதற்கு தான் நான் விரும்புகிறேன்.
என்னை மெகா ஏலத்தில் எடுக்கப்போகிறார்கள் என்பது குறித்து என்னிடம் இதுவரை அதிகாரப்பூர்வமாக பேசவில்லை. ஆனால் என்னை குறிவைத்து எடுக்கவிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.