லட்டு போல கைக்கு வந்த கேட்சை கோட்டை விட்ட CSK வீரர் ராயுடு! அரை சதம் விளாசிய பேட்ஸ்மேன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பதி ராயுடு எளிதான கேட்ச்சை கோட்டை விட்டதை ரசிகர்கள் கடுமையாக கிண்டலடித்து விமர்சித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோற்றது.
இப்போட்டியில் பஞ்சாப் அணி நட்சத்திர வீரர் லிவிங்ஸ்டன் 60 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் லிவிங்ஸ்டன் ஜடேஜா ஓவரின் 5வது பந்தில் தூக்கி அடிக்க முற்பட்டு, அது ராயுடு கைக்கு வந்தது.
ஆனால் ராயுடு லட்டு போல எளிதாக வந்த அந்த கேட்சை கோட்டை விட்டார். இதனால் லிவிங்ஸ்டனுக்கு ஒரு லைஃப் கிடைத்தது, இதை பயன்படுத்தியே அவர் அரை சதத்தை கடந்து 60 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் எளிதான கேட்சை கோட்டை விட்ட ராயுடுவை ரசிகர்கள் கடுமையாக சாடி சமூகவலைதளத்தில் பதிவிட்டனர்.
Ambati Rayudu pic.twitter.com/nQt1JomVBJ
— Gagan?? (@1no_aalsi_) April 3, 2022