இந்தியா, பாகிஸ்தான் டி20 உலகக்கிண்ண அரையிறுதிக்கு செல்லும் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
டி20 உலகக்கிண்ண தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் தகுதி பெறும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கிண்ண தொடர் நடைபெற உள்ளது. இதில் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், 2ஆம் திகதி நடைபெறும் போட்டிகளில் அமெரிக்கா-கனடா மற்றும் மேற்கிந்திய தீவுகள்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன.
ஒவ்வொரு அணியும் இந்த தொடருக்காக தயாராகி வரும் நிலையில், எந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
இந்த தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும் என அவர் கூறியுள்ளார்.
போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு செல்லாது என அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |