மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய அம்பத்தி ராயுடு - போட்டி போடும் ஐபிஎல் அணிகள்
2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் அம்பத்தி ராயுடு செய்துள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சென்னை அணியின் நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடுவை அந்த அணி தக்க வைக்கும் என எதிர்பார்த்த நிலையில் கழட்டி விடப்பட்டார். இந்நிலையில் அவர் தனது பெயரை இந்தாண்டு ஏலத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பட்டியலில் பதிவு செய்துள்ளார். சென்னை அணிக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியபோது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு சென்னை அணியில் தோனி இல்லாத சமயங்களில் அவ்வப்போது விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார்.
இதனால் அவரை வாங்க ஐபிஎல் அணிகள்போட்டி போடும் என கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு அம்பத்தி ராயுடு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.