தயவுசெய்து இந்த நாட்டிற்கு பயணிக்காதீர்கள்! நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அரசு எச்சரிக்கை
தயவுசெய்து பிரித்தானியா அரசாங்கத்தின் மஞ்சள் (amber) பட்டியில் உள்ள நாடுளில் ஒன்றான இத்தாலிக்கு பயணிக்க வேண்டாம் என பிரித்தானியா வணிக அமைச்சர் Anne-Marie எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று முதல் பிரித்தானியா பயணிகள் நாட்டிற்குள் நுழைய இத்தாலி அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரித்தானியாவின் வணிக அமைச்சர் Anne-Marie இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். மஞ்கள் (amber) என்றால் அவசியமான குடும்ப காரணங்களின்றி தேவையில்லாமல் பயணிக்க வேண்டும் என்பதே என பிரித்தானியா பிரதமர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அதாவது, மஞ்கள் (amber) பட்டியலில் உள்ள நாடுகளுக்கு தேவையில்லாமல் பயணிக்ககூடாது மற்றும் மஞ்கள் (amber) பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து பிரித்தானியா திரும்புவர்கள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
நாம் மெதுவாக மற்றும் பாதுகாப்பாக இதிலிருந்து மீள வேண்டும். நாம் நிலையான வழியில் முன்னோக்கி நகர வேண்டும் என வணிக அமைச்சர் Anne-Marie தெரிவித்துள்ளார்.