பிரான்சில் ஐந்து பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆம்பர் எச்சரிக்கை
தென்கிழக்கு பிரான்சின் ஐந்து பகுதிகளுக்கு வெப்பம் தொடர்பில் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ardèche, Alpes-Maritimes, Var, Drôme மற்றும் Alpes-de-Haute-Provence ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 36-39°C வரை எட்டும் என்றும், ஞாயிற்றுகிழமை முதல் வெப்பநிலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் முதியோர், குழந்தைகள், சிறு பிள்ளைகள், கர்ப்பிணிகள் மற்றும் உடல் நலம் இல்லாதவர்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், வெயிலில் செல்லவேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த பகுதிகள்போக, Pyrénées-Orientales, Aude, Hérault, Gard, Bouches-du-Rhône, Vaucluse, Lozère, Haute-Loire, Rhône, Isère, Hautes-Alpes மற்றும் Corsica ஆகிய பகுதிகளுக்கு வெப்பம் தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.