பிரித்தானியாவில் போராடும் அம்பிகாவின் போராட்டம் வெல்ல வேண்டும்! நடிகர் சத்யராஜ் ஆதரவு தெரிவித்து வெளியிட்ட வீடியோ
ஈழத்தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் அம்பிகாவிற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், வணக்கம், சகோதரி அம்பிகா செல்வகுமாரின் அறவழி போராட்டத்தை திலீபனின் போராட்டத்துக்கு ஒப்பிட்டு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு விசாரணை வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்கு அவர் உண்ணாநிலை போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்.
அவரின் கோரிக்கை வெற்றி பெற வேண்டும். விரைவில் அவர் போராட்டம் கைவிடப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
அம்பிகா கேட்கும் கேள்விகள் அனைத்தும் நியாயமானவை.
அவற்றுக்கு சர்வதேச நீதிமன்றம் வழிவகை செய்ய வேண்டும், அவரின் போராட்டம் வெல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன் நன்றி என கூறியுள்ளார்.