179 ஓட்டங்கள் விளாசிய அமெலியா கெர் - இந்தியாவின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து அணி
மகளிர் ODI கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனையை நியூசிலாந்து அணி முறியடித்துள்ளது.
179 ஓட்டங்கள் விளாசிய அமெலியா கெர்
நியூசிலாந்து வந்துள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி, 5 T20 மற்றும் 3 ODI கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இன்று வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 346 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக, அன்னேகே போஷ் 91 ஓட்டங்களும், அணித்தலைவி லாரா வோல்வார்ட் 69 ஓட்டங்களும் குவித்தனர்.

347 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணி, 49.4 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 450 ஓட்டங்கள் குவித்தது.
நியூசிலாந்து அணித்தலைவி அமெலியா கெர், 139 பந்துகளில் 23 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 179 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை போராடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இந்தியாவின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து
இதன் மூலம், நியூசிலாந்து மகளிர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் ODI வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 339 ஓட்டங்களை இந்திய அணி சேஸ் செய்ததே மகளிர் ODI வரலாற்றில் அதிகபட்சமாக இருந்தது.
இன்றைய போட்டியில், நியூசிலாந்து மகளிர் அணி 347 ஓட்டங்களை சேஸ் செய்து, இந்திய மகளிர் அணியின் சாதனையை முறியடித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |