அமெரிக்காவின் ராஜா..! ரூ.2.67 லட்சம் கோடி சொத்து மதிப்பு: யார் இவர்?
ஸ்டீபன் ஆலன் ஸ்வாசர்மென், உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை நிறுவியவர்களின் தொடக்கம் மிகச் சாதாரணமாக இருந்திருப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புல் வெட்டும் தொழிலில் தொடங்கி, இன்று உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
தொடக்க காலம்
ஸ்டீபன் ஆலன் ஸ்வாசர்மென்(Stephen Allen Schwarzman) 1947 இல் பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவில் பிறந்தார்.
14 வயதிலேயே புல் வெட்டும் தொழிலில் ஈடுபட்டார், பின்னர் அதை ஒரு வணிகமாகவே மாற்றினார். படிப்பில் கவனம் செலுத்தி, யேல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
கல்வியும் ராணுவ சேவையும்
யேல் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுடன் இணைந்து படித்தார்.
பின்னர் அமெரிக்க ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.ஹார்வர்டு வணிகப் பள்ளியில் MBA பட்டம் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
தந்தையின் தொழிலை விரிவுபடுத்த விரும்பிய ஸ்டீபன், நிதித்துறை சார்ந்த வேலை தேடினார்.
டொனால்ட்சன், லஃப்கின் & ஜென்ரெட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.1985 இல், தனது முதலாளியான பீட்டர்சனுடன் இணைந்து தி பிளாக் ஸ்டோன் குழுமத்தை நிறுவினார்.கடன் வழங்குதல், உள்கட்டமைப்பு, காப்பீடு போன்ற பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தினார்.
தி பிளாக் ஸ்டோன் (Black Stone) உலகின் மிகப்பெரிய வணிக சொத்துக்களில் ஒன்றாக உருவெடுத்தது.
சாதனைகள் மற்றும் விருதுகள்
2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஸ்டீபனின் நிகர சொத்து மதிப்பு ₹2.67 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டது.
2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ப்ளூம்பெர்க்கின் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 50 நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2019 இல், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு $150 மில்லியன் நன்கொடை வழங்கினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |