ட்ரம்ப் விதித்த வரிகளின் பாதி கட்டணத்தை அமெரிக்கா திருப்பிச் செலுத்தும்: வெளிவரும் புதிய தகவல்
இதுவரை ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டத்திற்கு புறம்பானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், பாதி கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாதி கட்டணம்
குறித்த தகவலை அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். NBC செய்தி நிறுவனத்தில் நேர்காணல் ஒன்றிலேயே ட்ரம்பின் வரி தொடர்பில் ஸ்காட் பெசென்ட் விளக்கமளித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக இல்லை என்றால், வரி வசூலிக்கப்பட்டதில் பாதி கட்டணங்களைத் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இது அமெரிக்க கருவூலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் தீர்ப்பளித்தால், எங்களால் மறுக்க முடியாது என்றார். இருப்பினும், வரி விதிப்புக்கு எதிரான தீர்ப்பு என்றால், அது நாடுகளுடனான பேச்சுவார்த்தையில் ட்ரம்பின் நிலைப்பாட்டை பாதிக்கும் என்றார்.

ஒருபுறம் கிம் - ட்ரம்ப் சந்திப்பு... மறுபுறம் வடகொரியாவில் ஊடுருவிய அமெரிக்க சிறப்புப்படை: திகில் பின்னணி
ஆனால், அமெரிக்க தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குனர் கெவின் ஹாசெட் தெரிவிக்கையில், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை என்றால், வரிகளை அமுல்படுத்த வேறு சட்ட அதிகாரங்கள் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பிரிவு 232 ஐ பயன்படுத்த முடியும் என்றும், எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை அமுல்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.
ட்ரம்பின் பரஸ்பர வரிகள் உட்பட விதிக்கப்பட்ட வரிகள் அனைத்தும் ஜனாதிபதி ஒருவரின் அதிகார வரம்பை மீறும் செயல் என ஆகஸ்ட் 29ம் திகதி ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆகஸ்ட் மாதம் அமுலுக்கு வந்த ட்ரம்பின் பரஸ்பர வரிகள், நீதிமன்றம் தனது உத்தரவை அமுல்படுத்த அக்டோபர் 14 வரை தாமதப்படுத்துவதால் அமுலில் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி
மட்டுமின்றி, நீதிமன்றத் தீர்ப்பு, ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடருவதையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் மேல்முறையீடு செய்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், வரிகள் இல்லாமல், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெறும் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக பெசென்ட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதனிடையே, கருவூலத் துறையின் மாதாந்திர அறிக்கையின்படி,
ஜூலை மாதத்தில் அமெரிக்கா சுங்க வரிகளில் தோராயமாக 28 பில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 16.8 பில்லியன் டொலர்கள் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் ட்ரம்பின் வரிகளாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் சுமார் 81.5 பில்லியன் டொலர் வசூலித்துள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |