நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே மரணம்: இளம் நடிகருக்கு நேர்ந்த சோகம்
அமெரிக்காவின் பிரபல நடிகரான ஜேன்சன் பனெட்டீர் தனது இளம் வயதிலேயே மரணத்தை தழுவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் நடிகரின் மர்ம மரணம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு விடுதியில் பிரபல இளம் நடிகரான ஜேன்சன் பனெட்டீரின் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இறந்து கிடந்திருக்கிறார். இவர் பிரபல நடிகையான ஹெய்டன் பனெட்டீரின் சகோதரர் ஆவார்.
ஜேன்சன் பனெட்டீரின் மரணத்தைப் பற்றி தகவலை ஹெய்டன் பனெட்டீரின் பிரதிநிதி ஒருவர் சிஎன்என்க்கு அளித்த தகவலின் பேரில் உறுதியாகியுள்ளது.
காவல் துறை விசாரணை
செய்தி கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரஞ்ச் டவுனின் காவல்துறை முதல் கட்ட விசாரணையில் அவர்கள் செல்லும் முன்பே ஜேன்சன் பனெட்டீரின் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
அப்போது வர்த்தக விசயமாக அவரை காண வந்த அவரது நண்பர் ஜேன்சன் பனெட்டீரினை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஜேன்சன் பனெட்டீரின் நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேன்சன் பனெட்டீரினின் தந்தையான ஆலன் அவரோடு முந்தைய நாள் இரவு தொலைப்பேசியில் பேசியிருப்பதாகக் கூறியுள்ளார்.
ஜேன்சன் பனெட்டீரின் தி வாகிங் டெட் மற்றும் ஐஸ் ஏஜ்: தி மெல்ட்டவுன் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமடைந்தார்.
28 வயதே ஆன இந்த இளம் நடிகரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைப் பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது.