ஒரேயடியாக 300கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து: ஆத்திரத்தில் கொந்தளித்த பயணிகள்

flights staff cancel
By Arbin Jun 21, 2021 03:56 AM GMT
Report

அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் ஒரேயடியாக 303 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவத்தில் பயணிகள் கோபத்தை பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்கன் விமான சேவை நிறுவனம் விமானிகள் பற்றாக்குறை, நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக சனி, ஞாயிறு நாட்களில் 303 விமானங்களை ரத்து செய்துள்ளது.

நீண்ட பல மாதங்களுக்கு பிறகு வார இறுதி நாட்களை கொண்டாட முடிவு செய்த மக்கள், இந்த திடீர் விமான ரத்து நடவடிக்கைகளால் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பலர் தங்கள் ஆத்திரத்தை சமூக ஊடகங்களில் கொட்டித் தீர்த்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 123 விமானங்கள் மேலே குறிப்பிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஞாற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 180 என அதிகரித்துள்ளது. மட்டுமின்றி திங்கட்கிழமையும் 98 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, ஜூலை இறுதி வரையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 3,000 விமானங்கள் வரையில் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஜூன் மாதத்தில் மட்டும் நாளுக்கு 50 முதல் 60 விமானங்கள் வரையில் ரத்து செய்ய வேண்டிய சூழல் இருப்பதாகவும் நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜூலை மாதத்தில் நாளுக்கு 80 விமானங்கள் வரையில் ரத்தாகலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமான சேவை நிறுவனங்கள் வரலாற்றில் முதன்முறையாக 2020ல் மொத்தமாக 35 பில்லியன் டொலர் தொகையை இழந்துள்ளது.

இதில், உலகில் விமான எண்ணிக்கை அதிகம் கொண்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத முதல் பாதியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 950 விமானங்களை ஊழியர்கள் பற்றாக்குறையால் ரத்து செய்ய உள்ளது.

ஜூலை மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 3,000 தொடலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். பல ஊழியர்கள் வேலையை விட்டு நின்று போனதாலும், புதிதாக ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் தாமதமாவதாலும் தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US