தரையிறங்கும் போது திடீரென குலுங்கிய விமானம்..., காயமடைந்த பயணிகள்
விமானம் தரையிறங்கிய போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் காயமடைந்துள்ளனர்.
தரையிறங்கும் போது சிக்கல்
American Airlines நிறுவனத்தின் 271 என்ற எண் கொண்ட விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து புறப்பட்டு மவுய் நகருக்கு சென்றது. இந்த விமானத்தில் 167 பயணிகள், 7 ஊழியர்கள் என மொத்தம் 174 பேர் இருந்தனர்.
இந்த விமானமானது Hawaii தீவில், Kahului விமான நிலையத்தில் தரையிறங்கிய போது சிறிய அளவில் சிக்கல் ஏற்பட்டது.
6 பேர் காயம்
அப்போது விமானத்தில் இருந்த ஒரு பயணி மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதன் பின்னர் விமானம் தரையிறங்கியதும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இது தொடர்பாக American Airlines விமான நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "எங்களுடைய பராமரிப்பு குழுவினரின் சோதனைக்கு முன்பே பயணிகளின் சேவைக்கு விமானம் கொண்டு செல்லப்பட்டு விட்டது.
வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது" என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |