விமானத்தினுள் திடீரென்று பரவிய வாசனை... வலுக்கட்டாயமாக கறுப்பினப் பயணிகளை வெளியேற்றிய ஊழியர்கள்

New York Flight
By Arbin May 29, 2024 10:50 PM GMT
Report

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் திடீரென்று பரவிய வாசனையை அடுத்து, அதற்கு காரணம் கறுப்பினப் பயணிகள் என குறிப்பிட்டு விமான ஊழியர்களால் 8 பேர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அருவருப்பான உடல் வாசனை

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பயணிகள் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அந்த 8 கறுப்பினப் பயணிகளும் முன் அறிமுகம் இல்லாதவர்கள் என்றே கூறப்படுகிறது.

விமானத்தினுள் திடீரென்று பரவிய வாசனை... வலுக்கட்டாயமாக கறுப்பினப் பயணிகளை வெளியேற்றிய ஊழியர்கள் | American Airlines Kicked 8 Black Men Off Flight

கடந்த ஜனவரி மாதம் பீனிக்ஸ் விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் செல்ல அமெரிக்கன் ஏர்லைன்ஸ், விமான இலக்கம் 832ல் தயாராகி இருந்துள்ளனர். மட்டுமின்றி, அந்த 8 பேர்களும் விமானத்தின் பல பகுதிகளில் அமர்ந்திருந்துள்ளனர்.

ஆனால் அருவருப்பான உடல் வாசனை குறித்து அந்த விமானத்தில் பயணி ஒருவர் புகார் அளித்த நிலையில், திடீரென்று 8 கறுப்பினப் பயணிகளும் ஒவ்வொருவராக சுற்றி வளைக்கப்பட்டு, அந்த விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் நியூயார்க் செல்லும் வேறு விமானத்தில் அந்த 8 பேர்களையும் அனுப்பி வைக்க சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டுள்ளனர். இதனிடையே, வேறு விமானம் நியூயார்க் செல்லாத நிலையில், தொடர்புடைய விமானத்திலேயே அவர்களை பயணிக்க அனுமதித்துள்ளனர்.

விமானத்தினுள் திடீரென்று பரவிய வாசனை... வலுக்கட்டாயமாக கறுப்பினப் பயணிகளை வெளியேற்றிய ஊழியர்கள் | American Airlines Kicked 8 Black Men Off Flight

ஆனால் தங்களால் ஒரு மணி நேரம் வீணானதாக குறிப்பிட்டு, பல வெள்ளையர்கள் முறைப்பதை தம்மால் உணர முடிந்தது என தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ள மூவரில் ஒருவரான Emmanuel Jean Joseph தெரிவித்துள்ளார்.

5 மனி நேரமும் அவதி

விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும் கறுப்பின மக்கள் என்பதால், நடந்த சம்பவத்தை தமது அலைபேசியில் Xavier Veal என்பவர் பதிவு செய்துள்ளார். இது இன ரீதியான பாகுபாடு என்றே கறுப்பின விமான ஊழியர் ஒருவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் 8 பேர்களும் விவாதித்து, இறுதியில் மூவர் நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

விமானத்தினுள் திடீரென்று பரவிய வாசனை... வலுக்கட்டாயமாக கறுப்பினப் பயணிகளை வெளியேற்றிய ஊழியர்கள் | American Airlines Kicked 8 Black Men Off Flight

மீண்டும் அதே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டாலும், நியூயார்க் செல்லும் வரையில் அந்த 5 மனி நேரமும் அவதிப்பட்டதாகவும், அந்த முழு சம்பவமும் அதிர்ச்சிகரமாகவும், வருத்தமளிப்பதாகவும், அவமானகரமாகவும், பயமுறுத்தியதாகவும், இழிவானதாகவும் உணர்ந்ததாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க ஏர்லைன்ஸ் நிர்வாகம் இந்த விவகாரத்தில் உரிய விளக்கமளிப்பதற்கு பதிலாக, இன பாகுபாடை தாங்கள் ஏற்பதில்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும், விசாரணை நடந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ் ஆனைப்பந்தி, Jaffna, Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US