பிரித்தானியாவில் ரஷ்யாவிற்காக உளவு பார்த்த அமெரிக்க இராணுவ வீரர்
American soldier held in UK suspected of spying for Russia: ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்.
பிரித்தானியாவில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர், அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
30 வீரர்களில் ஒருவர்
41 வயதான லெப்டினன்ட் கர்னல் பிராண்டன் டைனர், தேசியப் பாதுகாப்பு மற்றும் உளவு குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர், எஸ்.பி.எஸ், நேவி சீல்ஸ் மற்றும் டெல்டா ஃபோர்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறப்புப் படைப் பணிக்குழுவில் ஓராண்டு காலம் பணியாற்றியிருந்தார்.
திருமணமானவரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான அவர், குளோசெஸ்டர்ஷயரின் இன்ஸ்வொர்த்தில் உள்ள தனது நான்கு படுக்கையறைகள் கொண்ட வீட்டில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவர், அருகிலுள்ள இம்ஜின் (Imjin) முகாமில் அமைந்திருந்த நேட்டோவின் 'அலைடு ரேபிட் ரியாக்ஷன் கார்ப்ஸ்' (Allied Rapid Reaction Corps - ARRC) பிரிவில் இருந்த சுமார் 30 அமெரிக்க வீரர்களுள் ஒருவர் என்றே தெரிய வருகிறது.
2013-இல் அவர் காபூலில் இருந்த, தெரிவு செய்யப்பட்ட 'ஸ்பெஷல் ஆபரேஷன்ஸ் ஜாயிண்ட் டாஸ்க் போர்ஸ்' (Special Operations Joint Task Force) பிரிவில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், விசாரணையுடன் தொடர்புடைய வட்டாரங்கள், டைனர் உண்மையான ரஷ்யர்கள் எவரிடமும் எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக கூறபப்டுகிறது.
அமெரிக்க அதிகாரிகள் மற்றும் FBI ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல்துறையினரின் விசாரணைக்குப் பின்னரே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்க அதிகாரிகள்
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 1 மற்றும் பிரிவு 3-ன் கீழ் குற்றங்களைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, லண்டன் காவல் நிலையம் ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

டைனர் 2008-ஆம் ஆண்டில் மூத்த மனிதவள அதிகாரியாக இராணுவத்தில் சேர்ந்ததாகவும், ஈராக், கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய வெளிநாடுகளுக்குப் பணி நிமித்தமாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.