இந்த ஆண்டு இறுதியில் இந்திய வம்சாவளியினர் அமெரிக்க ஜனாதிபதியாவார்: டைம் டிராவலர் வெளியிட்டுள்ள ஐந்து எச்சரிக்கைகள்...
இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடல்நலக் குறைவு காரணமாக பதவியிலிருந்து அகற்றப்படுவார் என்கிறார் ஒரு டைம் டிராவலர்.
இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியாவார் என்கிறார் அவர்.
தன்னை உண்மையான டைம் டிராவலர் என அழைத்துக்கொள்ளும் ஒருவர், இந்த ஆண்டு இறுதி முதல், அடுத்த ஆண்டு துவக்கம் வரை, ஐந்து முக்கிய நிகழ்வுகளை உலகம் சந்திக்க இருப்பதாக எச்சரித்துள்ளார்.
Image: cwcline/TikTok
என்னென்ன திகதிகளில் என்னென்ன நடக்கும் என்பதையும் திகதி வாரியாக தெரிவித்துள்ளார் அவர்.
டிக் டாக்கில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், அடுத்த மாதம், அதாவது, 2022 அக்டோபர் 3ஆம் திகதி, 5 இளைஞர்கள், டைனோசார் ஒன்றின் முட்டையையும், மற்ற பிரபஞ்சங்களைத் தொடர்பு கொள்ள உதவும் கருவி ஒன்றையும் கண்டுபிடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
Image: @timevoyaging/TikTok)
அதற்கு அடுத்தபடியாக, அக்டோபர் மாதம் 30ஆம் திகதி, ஏலியன்களுடன், மிகப்பெரிய பறக்கும் தட்டு ஒன்று Area 51 என்ற இரகசிய இடத்தில் வந்து இறங்க உள்ளதாம்.
நவம்பர் மாதம் 20ஆம் திகதி, மெக்சிகோவிலுள்ள மலைகளில் டிராகன்கள் கண்டுபிடிக்கப்படுமாம்.
Image: @timevoyaging/TikTok
டிசம்பர் 10ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடல்நலக் குறைவு காரணமாக பதவியிலிருந்து அகற்றப்படுவார் என்றும், அவருக்கு பதிலாக, இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியாவார் என்றும் கூறியுள்ளார் அந்த டைம் டிராவலர்.
ஐந்தாவதாக, 2023 ஜனவரி 1ஆம் திகதி, அமெரிக்க மாகாணம் ஒன்றில் நிறைவேற்றப்படும் சட்டம் ஒன்று, பெரும் வன்முறைக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார் அவர்.
Image: @timevoyaging/TikTok)
ஆனால், இப்படி பலர் பல விடயங்கள் குறித்து சமூக ஊடகங்களில் எச்சரிப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே ஒருவர் இந்த ஆண்டு, அதாவது 2022, செப்டம்பர் 24 அன்று, அதாவது, இந்த மாதம் 24ஆம் திகதி, உலகம் ஒரு சூரியப் புயலை சந்திக்க இருப்பதாக எச்சரித்திருந்தார்.
ஆனால், அப்படி ஒன்று நடக்கவில்லை என்பதை நாம் எல்லோரும் அறிவோமே!