பேஸ்புக் பயன்படுத்தினால் கன்னத்தில் அறை! அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரின் வியக்க வைக்கும் செயல்.. வீடியோ
அமெரிக்காவில் ஒருவர் பேஸ்புக் பயன்படுத்தும் போதெல்லாம் கன்னத்தில் அறைவதற்கு ஒரு பெண்ணை வேலைக்கு வைத்துள்ளார்.
அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவரான மனீஷ் சேதி என்பவர் பாவ்லோக் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். அவர் வேலை வாய்ப்பு இணையதள பக்கம் ஒன்றின் மூலமாக காரா என்ற இளம்பெண்ணை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்.
அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 500 ரூபாய் சம்பளம் ஆகும். மனீஷ் எப்போதெல்லாம் பேஸ்புக் பார்க்கிறாரோ அப்போது அவரது கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விடுவதே காராவின் வேலை ஆகும்.
பேஸ்புக்கில் வீணாக பொழுது போக்குவதை தவிர்த்தால் வேலையில் கூடுதலாக கவனம் செலுத்த முடியும் என்பதற்காகவே மனீஷ் சேதி இப்படி வேலைக்கு ஆள் எடுத்துள்ளார்.
இந்த வேலை குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதனை பகிர்ந்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதே சமயம் மனீஷ் சேதிக்கு கன்னத்தில் அறை வாங்குவது புதிதல்ல ஓய்வு நேரத்தில் யாரையாவது கத்த சொல்வதும் கன்னத்தில் அறைய சொல்வதுமே பொழுது போக்காக வைத்துள்ளார்.