700 மில்லியன் டொலரை பயனர்களுக்கு வழங்கும் கூகுள்: பயனடையும் பல மில்லியன் அமெரிக்கர்கள்
மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கூகுள் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
கூகுள் எதிரான வழக்கு
ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் உள்ள சில அப்களை வாங்குவதற்கு கூகுள் நிறுவனம் அதிகமான கட்டண தொகையை வசூலித்ததாகவும், சில கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் தெரிவித்து கூகுள் நிறுவனத்தின் மீது நம்பிக்கையற்ற வழக்கு தொடரப்பட்டது.
அத்துடன் கூகுள் நிறுவனம் தங்களது போட்டிகளை தவிர்ப்பதற்காக போட்டிகளுக்கு எதிரான உத்திகளை பயன்படுத்தி, பயனாளர்களை அடைய கூகுள் பிளே-ஸ்டோரை மட்டும் டெவலப்பர்கள் நிர்பந்திக்க படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
Sopa Images | Lightrocket | Getty Images
இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்ட கூகுள்
இந்நிலையில் Alphabet Inc சொந்தமான Google நிறுவனம் தங்கள் மீதான நம்பிக்கையற்ற வழக்கில், மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
அத்துடன் கூகுள் பிளே-ஸ்டோரில் சிறந்த போட்டிக்கான கூடுதல் இடத்தை வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையற்ற வழக்கின் நிபந்தனைகள் படி, $70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியாக வழங்கப்படும் போது, அமெரிக்க மாகாணங்கள் மற்றும் பயனாளர்களுக்கு, கூகுள் நிறுவனம் சுமார் $630 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்க மாகாணங்களில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு வழங்க உள்ளது.
Associated Press
அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் கூகுளின் இந்த இழப்பீட்டில் பயனடைய உள்ளனர். இதில் 70 மில்லியன் வாடிக்கையாளர்கள் இதற்காக எந்தவொரு விண்ணப்பங்களையும் நிரப்ப வேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த இழப்பீட்டை உறுதிப்படுத்துவதற்கு நீதிபதியின் இறுதி ஒப்புதல் இன்னும் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Google, $700 million settlement, antitrust suit, Alphabet IncGoogle Play app store, antitrust settlement, consumers,